சோளகர் தொட்டிநூல்;சோளகர் தொட்டி
எழுதியவர்;ச.பாலமுருகன்

பதிப்புரை

இந்நூல் கர்நாடக எல்லைப்புற மலை கிராமத்தில் வாழும் சோளகர் பழங்குடி மக்களைப்பற்றியது.
அம்மக்களின் மண்,வனம் இவைகளிலிருந்து அவன் துரத்தப்படுகிறான்.இந்த வன்மத்தால் அவனுக்கும் வனதுக்கும்மிடையே இருந்த ஆன்மீக தொப்புள் கொடி உறவு அறுக்கப்படுகிறது.

இந்நாவலின் சிக்குமாதா அந்த அறுபட்ட,ஆதரவற்ற,வழி தெரியாத பழங்குடி சமூகத்தின் ப்ரிதிநிதியாக இருக்கிறான்.இந்நாவலில் பதிய வைத்துள்ள அனைத்து நிகழ்வுகளும் தமிழ் வாசகர்களுக்கு முற்றிலும் புதியது.பழங்குடி மக்களின் பண்பாடு,வாழ்கை,தொன்மங்கள் மற்றும் அம்மக்களின் வனம் போன்றவற்றை,தொடர்ந்து அவற்றுடன் ஏற்படுத்திக்கொண்ட பிணைப்பின் மூலம் உள்வாங்கயுள்ளார் நூலாசிரியர்,இந்நூல் ஆர்பாட்டம்மற்ற நடையில் செல்கிறது.உண்மைகள் எப்போதும் எளிமையானதாகவும்,கூர்மை மிக்கதாகவும் இருக்கும் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் அரசு இயந்திரங்களின் கொடூர அடக்குமுறையால் பழங்குடி மக்கள் எதிர் கொண்ட துயரங்களுக்கு இந்நாவல் மட்டுமே தமிழில் இலக்கிய சாட்சியாகும். ச.பாலமுருகன் தன்னை மனித உரிமை செயல்பாடுகளுடன் இனைதுக்கொண்டவர். பி.யு.சி.எல். அமைப்பில் செயல்படுபவர்.

இந்நாவலில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சம்பவங்களும் நமது ஊருக்கு அருகில் வாழ்ந்துகொண்டிருக்கும்.எழுத படிக்கத்தெரியாத மனிதர்களுடயது.நான் அறிந்தவரையில் பழங்குடி மக்கள் என்றால் தேன் எடுப்பார்கள் கீழே சத்தி மற்றும் கோபி அந்தியூர் போன்ற இடங்களில் தோட்டவேலைகளில் ஈடுபடுவார்கள் என்றிருந்தேன்.ஆனால் அவர்களின் வாழ்கை முறைகளை பற்றி இன் நாவல் வாயிலாகவே உணர்ந்தேன்.இந்நாவலில் வரும் பகுதிகளில் சில.

தொட்டியில் சிக்குமாதா கரடியை சுட்ட பிரச்சனையில் வழக்கின்றி வெளியே கொண்டுவர தாங்கள் துறையனிடம் ஏறுக்கொண்ட 500 ரூபாய் கடனை அடைக்கும் நாள்
வருகிறது அறிந்து கலகமாயிருந்தனர்.கொதல்லியோ தங்களின் நிலையை எடுத்துச்சொல்லி மணியக்காரனிடம் சற்று கால அவகாசம் வாங்கலாம் என்று தெரியம் சொன்னான். ஆனால் கோல்கரானின் இந்த வேதனையில் சிக்குமாதா சிறிதும் பங்கேடுக்காமளிருந்துவந்தான்.அவன் வனக்காவலர்களால் தாகப்பட்டதிற்கு பின்பு வேருஆலக மாரிருந்தான் தொட்டியே மழைல்லை என்று கவல்படும் போது சிக்குமாதா மட்டும் கவலைல்லாமல் தனிமையில் அமர்ந்து கஞ்ச புகைபதிலேயே ஆர்வம் காட்டினான்.சிக்குமாதாவின் நிலை கண்டு சென்நெஞ்சா வேதனைபட்டான்.தன் மகனுக்கு என்னமோ நிகழ்ந்துவிட்டது என்றுமட்டும் அவனால் யூகிக்க முடிந்தது.

சிக்குமாதா தரவேண்டியே பணம் ரூபாய் 500 க்கு.துரையன் மணியகார மாதப்பாவிடம் தன் மனைவி சாந்தவை விட்டுகொடுத்து.சிக்குமாதவின் நிலத்தை அபகரிக்கிறான் துரையன்.இதை பார்க்கும் பேதன்.முதல்முறையாக மூங்கிலை பிளந்து அந்த சீர்காட்டில்
கோல்காரன் பூமிக்கும்,அவன் பூமிக்கும் இடையே வேலி அமைக்கிறான்.
இப்படியாக கீழே இருந்த நம்மவர்கள் தொட்டி இனத்தவர்களின் நிலங்களை அபகரிததை இந்நாவல் விரிவாக சொல்கிறது.

தொட்டியில் கௌரி பூஜை சமயத்தில் கெம்ப்பம்மவிற்கு சிக்குமாதா தங்கதோடு வாங்கித் தருவதாக சொன்னான்.(சிக்குமாதா துறையனுக்கு சந்தன மரம் கடத்த உதவியாக இருந்தான்)கெம்ப்பம்மா தனக்கு தங்கம் வரப்போகிறது என்று தொட்டியில் உள்ள பெண்களிடம் சொல்கிறாள்.அதற்கு அவர்கள் எதற்காக கெம்ப்பம்மா அதை போட்டுக்கொள்கிறாய் என்ன வினவும் போது அவளுக்கு பதில் கூற தெரியவில்லை

இம்மக்கள் தங்கத்தை பற்றியே அறியாமல் ஆனந்தமாக வாழ்ந்ததை ஆசிரியர் சுட்டிக்கடுகிறார்

3 பின்னூட்டம்:

லேகா said...

கார்த்திக் உங்களின் வலைத்தளம் சிறந்த கட்டுரைகளையும்,அற்புத புகைபடங்களையும் கொண்டுள்ளது..உங்கள் புகைப்பட ஆர்வம் சிறக்க வாழ்த்துக்கள்.
"சோளகர் தொட்டி" நாவல் குறித்து எனது இலக்கிய நண்பர்கள் மூலம் அறிந்தேன்..நாவலை பற்றிய உங்கள் விளக்கம் நன்று..சென்னையில் இப்புத்தகம் எங்கு கிடைக்கின்றது?
தொடர்ந்து சிறப்பாய் எழுத வாழ்த்துக்கள்...

July 4, 2008 at 7:52 PM  
கார்த்திக் said...

அண்ணாசாலை 'ஹிங்கின்ஸ் பாதம்ஸ்'ல் கிடைக்கலாம்.

E-book

July 5, 2008 at 6:01 PM  
ரௌத்ரன் said...

நல்ல அறிமுகம் கார்த்திக்...இன்னும் விரிவாகக் கூட எழுதலாம்..தொடர்ந்து எழுதுங்கள்....

February 15, 2009 at 1:09 PM  
Visit the Site