சசி வாரியார் எனும் மலையாள எழுத்தர் பிரிதா என்ற தோழியின் உதவியோடு தமிழரான ஜனார்த்தனன் பிள்ளை எனும் தூகிலிடுபவரின் சுயசரிதையை முதலில் அவரது வாய் வழியாகவும் பின் அவராலேயே எழுதப்பெற்றும் ஆங்கிலத்தில் வெளியான நூல் Hangman's Journal.இதை இரா.முருகவேள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.ஏற்கனவே இவரது பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்,எரியும் பனிக்காடு போன்ற இவரது இரு மொழிபெயர்ப்பு நாவல்கள் வாசித்துள்ளதால் இந்நாவலையும் வாசிக்கும் ஆவலை மேலும் தூண்டியது.
இறப்பு என்பது எப்படி இருக்கும்.இறப்பை பற்றி சில பல கதைகள் இருந்தாலும் அது எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.முப்பதாண்டுகாலம் தூக்கிலிடுபவராக திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும்,விடுதலைக்குக்கு பிந்தைய இந்தியாவிலும் ஆரட்சர்ராக பணியாற்றியவர்.மொத்தம் 117 பேரை துக்கிலேற்றியிருக்கிறார்.அவரது அனுபவத்தை சசி வாரியார் புத்தகமாக கொண்டுவந்திருக்கிறார்(ஏனோ தமிழில் அது பற்றி யாரும் சிந்திக்கவில்லை).

தூக்கு தண்டனை அனுபவிப்பவரை விட அதை நிறைவேற்றுபவரின் மனத்துயரத்தையும் அவர்கள் அனுபவித்த குற்றவுணர்ச்சியையும்,சமூகத்தில் மற்றும் சக பணியாளர்களுடன் அவர்கள் நடத்தப்பட்ட விதம் பற்றியும் ஜனார்த்தனம் பிள்ளை நம்மிடையே பகிர்கிறார்.அவர் தான் முடித்த வேலைகளெல்லாம் மன்னரின் பெயரால் நிறைவேற்றப்பட்டது மன்னரோ கடவுளின் பெயரால் ஆணையிடுகிறார்.எனவே கடவுளின் பெயராலையே தான் இவ்வேலையை செய்வதாக அவர் தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டிருந்திருக்கிறார்.

அவரது தந்தைக்கு பின் அவர் இந்த வேலையை ஏற்று செய்திருக்கிறார்.தனது குடும்பத்திருக்காக அவர் இந்த வேலைக்கு போயிருக்கிறார்.நாட்டில் பஞ்சம் பசி எது நேர்ந்த போதிலும் இவருக்குண்டான சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது.தூக்கிலிடப்படும் நபர் முடிந்தளவு நீண்ட நேரம் துள்ளாமலும் கழுத்தெலும்பு முறியாமலும் சிரமமின்றி அனுப்பிவைப்பதை தனது கடமையாக கொண்டிருந்திருக்கிறார்.பணி ஓய்வுக்கு பிந்தைய நாட்களில் குற்றவுனர்ச்சியால் பாதிக்கப்பட்ட சமயங்களில் அவரது மாஷ் (ஆசிரியர்) உடனான உரையாடல் அவருக்கு சிறிது மன நிம்மதியை கொடுத்திருக்கிறது.அது பற்றியும் அவர் நினைவு கூர்கிறார்.

அவரது குறிப்புகளில் சில

மரணதண்டனை அளிக்கப்பட்ட நபர் அதிகாலை அழைத்துவரப்படுகிறார்.முந்தைய இரவு அவர் விரும்பும் உணவு அவருக்கு அளிக்கப்படுகிறது கடைசி இரவு தான் விரும்பிய உணவை அவர் சாப்பிடலாம் சூப்ரன்ட்டேன்டின் உணவையே தண்டனை அளிக்கப்பட உள்ளவருக்கும் வழங்கும் மரபு உள்ளது.அப்போதைய சூப்பிரண்டெண்டின் நேர்மை மிகுந்த ராகவன் நாயர் ஒரு நாள் தூக்குக் கைதியிடம் 'இறுதி உணவாக என்ன சாப்பிடுகிறாய்' என்று கேட்டதிலிருந்து இந்த மரபு தோன்றியது கைதி "இரவு எஜமான் என்ன சாப்பிடுறீங்களோ அதையே நானும் சாப்பிட விரும்புகிறேன்.

கைதியின் விருப்பத்தை உணர்ந்து கொண்ட ராகவன் நாயர் வீடுக்கு சென்று மனைவியிடம் வழக்கத்தைவிட நன்றாக ஒரு விருந்தாளிக்கு சமைப்பது போல் சமைத்து அதில் ஒரு பகுதியை சிறைக்கு அனுப்பி வைக்கும்படி சொன்னார்.இந்த வழக்கம் பின்னாளில் ஒட்டிக்கொண்டது.பின்பு தனது சொந்த மேசையிலிருந்து ஒரு வேலை உணவு அளிப்பதற்கு சிறை அதிகாரிக்கு ஒரு சிறிய தொகை வெகுமதியாக அளிக்கும் அளவிற்க்கு சென்றது.

அடுத்த முறை தூக்குமேடை பகுதியில் நுழையும் போது முதலில் என் கண்களில் படுவது பழைய அழுக்கேறிய மரப்பலகைகளான பொறிக்கதவின் மையத்திலுள்ள இருண்ட இடமாகத்தானிருக்கும்.ஆயிரம் ஜோடிக்காலடிகள் இறுதியாக அடிவைத்த இடம் அது.அந்த இடத்திற்கு வந்தர்க்கான வந்ததற்கான அடையாளங்களும் இருக்கின்றன.ஆனால் அங்கிருந்து இறங்கிப்போனதற்கு எந்த அடையாளமும் இல்லை.அதனால் அந்த இடம் என் மனக்கண்ணில் தெளிவாக தெரிகிறது.

இறந்து போனவங்களோட உடம்பக்கூட பாக்க பயப்படுற ஆளு நான்.அதுலையும் தற்கொலை செய்துகிட்டவிங்களை நான் பாக்கவே மாட்டேன் அவ்வளவு பயம்.அப்படி இருந்ததாலயோ என்னவோ இவரோட வேலை இவரோட மனத்துயரம் இதையெல்லாம் உணரமுடியுதோ என்னவோ.நேரடியாக தமிழில் வெளிவந்திருக்க வேண்டியநூல் ஒரு மலையாளியின் முயற்சியால் ஆங்கிலத்தில் வந்து முருகவேள் அவர்களின் உழைப்பால் உன்னதம் பதிப்பகத்தார் தமிழில் வழங்கிருகிறார்கள்.

வெளியீடு : உன்னதம்,ஈரோடு
விலை : 140
தொடர்புக்கு:கௌதமசித்தார்த்தன்-9940786278

பல பேர்த்தோட ரிங் டோனா இந்தப்பாட்டு இருந்தது அவனுகள்ட்ட இரு வரிகள் மட்டும் தான் இருந்தது.இன்று தான் அக்கரை சிங்கம் விவசாயி இளா அவரு பதிவுல இருந்து இந்தப்பாட்ட சுட்டேன்.நன்றி இளா.என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும்முன் செய்தி அனுப்பு…ஓஹ்
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதல் அதைச் சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு..

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்..
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன்..
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்..
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்..
(என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு......)

யாரோ? உன் காதலில் வாழ்வது யாரோ?
உன் கனவினில் நிறைவது யாரோ?
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ?
ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ?
ஒரு பகல் என்னை சுடுவது ஏனோ?
என் தனிமையின் அவஸ்த்தைகள் தீராதோ?

காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா?
இலையை போல் என் இதயம் தவறி விழுதே!
(என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு......)

பாடலை டவுன் லோட் செய்ய

எஸ்ரா அவர்களின் வலைப்பதிவில் சுட்ட குறும்படம் இதில் எனக்குப்பிடித்த இரு படங்கள்.ஏற்கனவே மஜீத் மஜித்தின் சில்ட்ரன் ஆப் ஹெவன்,பரன்,கலர் ஆப் பேரடைஸ் இம்மூன்று படங்களை பார்த்த பிறகு அவருக்கும் ரசிகனானேன்.
தொடுப்புதொடுப்பு

நன்றி எஸ்ரா.


அழகான நல்ல படங்களுக்கு மத்தியில் திருஸ்டிக்கு நம்ளுது ஒன்னு

இதுவும் செழியன் அவர்களின் உலக சினிமாவில் வாசித்த ஸ்பெனிஷ் மொழிப்படம் வெகுநாட்களுக்கு பிறகு காணக்கிடைத்ததுஒரு வயதான பெண் மற்றும் ஒரு இளம் பெண் இருவறும் சோகமாக நடனமாட மேடையில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நாற்காலிகளை அவர்கள் நடனமாடுவதர்க்கேர்ப்ப ஒருவர் ஒழுங்கு படுத்துவார்.அந்நாடகத்தை பார்வையிடும் பார்வையாளர்களில் ஒருவர்(மார்கோ) அழுதபடியே பார்த்துக்கொண்டிருப்பார்.அவரையும் நாடகத்தையும் ஒருசேர பார்த்துக்கொண்டிருப்பார் பெனிங்னியோ மார்டின்.அங்கே மார்கோவிடம் பேசலாம் என்றெண்ணி பேசாமல் திரும்பிவிடுவார்.

லிடியா எனும் காளை சண்டையில் கலந்துகொள்ளும் பெண் ஒருவரின் அறிமுகம் கிடைக்கிறது மார்கோவிற்கு.இருவரும் ஒருமுறை வெளியில் செல்லும் போது லிடியா மார்கோவிடம் பேச வேண்டும் என்று கூறுவர் ஒரு காளை அடக்கும் போட்டியில் பங்கு பெரும் லிடியா மாடு மோதியதால் மருத்துவமனையில் கோமா நிலையில் சேர்க்கப்படுகிறார்.பெனிங்னியோ மார்ட்டின் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிவார்.அங்கே பல ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கும் தனது நோயாளியான அலிசியாவிடம் தான் பார்த்த நாடகத்தை விவரித்து சொல்லுவார்.அப்படியே தன்னருகில் இருந்த மார்கோ அழுத்தத்தை பற்றியும் தான் மார்கோவிடம் பேச விரும்பியதையும் கூறுவர்.

அலிசியா இருக்கும் அதே மருத்துவ மனையில் லிடியாவும் சேர்க்கப்படுகிறார்.அங்கே பெனிங்னியோவையும் அலிசியாவையும் மார்கோ சந்திக்கிறார்.மார்கோவுக்கும் பெனிங்னியோவுக்கும் நட்பு ஏற்ப்படுகிறது.ஒருமுறை அலிசியாவுடன் பெனிங்னியோ பேசிக்கொண்டிருப்பதை மார்கோ பார்ப்பார்.அதற்கு பெனிங்னியோ கோமாநிலையில் இருந்தாலும் அவர்களுக்கும் எல்லா உணர்வுகளும் இருக்கும் என்பதோடு மார்கோவையும் லிடியாவுடன் பேசச்சொல்லுவார்

ஒருமுறை அலிசியாவிற்ககு பெனிங்னியோ பணிவிடை செய்யும் போது அலிசியாவின் தந்தை உள்ளே வருவார்.தன் பெண்ணிருக்கு ஒரு வாலிபன் சிகிட்சை அளிப்பதை அவர் விருப்பமில்லாத அவரிடம் சில பொய்களை சொல்லுவார் பெனிங்னியோ.படத்தின் ஆரம்பத்தில் நடனம் ஆடிய அந்த வயதான பெண்மணி அவ்வப்போது வந்து அலிசியாவை பார்த்துவிட்டு செல்லுவார்.அப்போது மார்கோ பெனிங்னியோவிடம் அவரைப்பற்றி கேட்பார். நான்காண்டுகளுக்கு முன் நடந்த வற்றை விவரிப்பார். பெனிங்னியோவின் வீட்டின் எதிரில் இருக்கும் நடனப்பள்ளியில் நடனம் பயிலுவார் அலிசியா தினமும் அவரை தன் வீட்டு ஜென்னல் வழியே தினமும் பார்த்துக்கொண்டிருப்பார்.ஒருநாள் அவர் தவறவிடும் பர்சை எடுத்துக்கொடுப்பார் அலிசியாவிடம்.அதுவரை பெனிங்னியோ யார் என்பதே அலிசியாவுக்கு தெரியாது.அப்போது ஓரிரு வார்த்தைகள் அலிசியாவிடம் பேசுவார்.தனக்கு உலகம் சுற்றுவதிலும் சைலன்ட் மூவி பார்ப்பது பிடிக்கும் என்கிறார் .அல்சியாவை காண்பதற்காக வீட்டிலேயே கிளினிக் வைத்திருக்கும் அலிசியாவின் சைகாலஜிஸ்ட் தந்தையிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி அவரை சந்தித்துவிட்டு அலிசியாவின் அறைக்குள் நுழைகிறான். அவன் வெளியே வரும்போது அவரை அங்கு காணும் அலிசியா அதிர்ச்சியடைகிறார்.அலிசியாவின் கிளிப்பை அங்கிருந்து எடுத்து வந்த விடுவார்,அடுத்தநாள் அலிசியா பள்ளிக்கு வருவார் என்று தன் வீட்டு ஜன்னலருகில் காத்திருப்பார்.மருத்துவமனைக்கு வரும் பெனிங்னியோ விபத்தில் சிக்கி கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பார் அலிசியா.அன்றிலிருந்து நான்காண்டுகளாக ஒருதலையாக அலிசியாவை காதலித்து வருவார் பெனிங்னியோ.அலிசியாவிருக்கு பிடித்த உலக நாடுகள் பற்றிய செய்திகளையும்,சைலன்ட் மூவி படங்களையும் பார்த்துவந்து கதை சொல்லிக்கொண்டிருப்பார் பெனிங்னியோ.பெனிங்னியோ சொன்னபாடி மார்கோவும் லிடியாவிடம் பேசிவருகிறார்.ஒருநாள் அங்குவரும் லிடியாவின் பழைய காதலன் மார்கோவிடம் அவரும் லிடியாவும் கல்யாணம் செய்வது பற்றி முடிவெடுத்ததைப்பற்றி கூறுகிறார்.அப்போதுதான் லிடியா தன்னிடம் இதைப்பற்றி பேசமுயன்றிருகிறார் என்பதை புரிந்து கொள்கிறார் அங்கிருந்து விலகுகிறார்.

ஒருநாள் வழக்கம் போல சிகிட்சை அளிக்க வருகிறார் பெனிங்னியோ.அன்று தான் பார்த்த சைலன்ட் மூவியின் கதையை பேசியபடி தனது பணியை தொடர முயலுகிறார்.
அந்த படத்தில் வரும் சில போர்னோ காட்சிகளை சொல்லியபடி.தனது மனநிலை இன்று சரிஇல்லை என்றும் கூறுவர்.

கோமாவில் இருக்கும் அலிசியாவை தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக மார்கோவிடம் சொல்லுகிறார் பெனிங்னியோ.தனது காதலியை பழைய காதலனுடன் விட்டுவிட்டு வருத்தத்துடன் வெளியேறும் மார்கோவிருக்கு பெனிங்னியோவின் பேச்சு கோவத்தை தூண்டுகிறது.இனிமேல் இவ்வாறு பேசவேண்டாம் என்று எச்சரிப்பதோடு மார்கோவும் விட்டுவிட்டு வந்த தனது உலகம் சுற்றும் பத்திரிகை பணியை தொடர சென்று விடுகிறார்.

கோமாவில் இருக்கும் அலிசியாவின் உடம்பில் ஏற்ப்பட்ட மாற்றத்தைப்பற்றி பெனிங்னியோவும் அவரது சக பெண் பணியாளரும் மேளிடத்திருக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.அலிசியா கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது.யார் காரணம் என்று விவாதிக்கும் போது பெனிங்னியோவுக்கும் மார்கோவுக்கும் நடந்த விவாதத்தை தெரிவிக்கிறார் பெனிங்னியோவுடன் பணிபுரிபவர்.அலிசியா வேறு மருத்துவமனைக்கும் பெனிங்னியோ சிறைச்சாலைக்கும் அனுப்பப்படுகிறார்.

வெளிநாட்டில் இருக்கும் மார்கோ பத்திரிகையில் லிடியா இறந்த செய்தியை அறிகிறார்.மருத்துவமனிக்கு தொடர்புகொள்கிறார் அப்போது பெனிங்னியோ சிறையில் இருப்பது அவராது சக பெண் ஊழியர் மூலமாக தெரிந்துகொள்கிறார்.யாருமற்ற அந்த நண்பனை காப்பாற்றுமாறு வேண்டுகிறாள்.(இவறும் ஒருதலையாக பெனிங்னியோ வாய் காதலித்திருப்பார் போலும்)

ஸ்பெயின் திரும்பிய மார்கோ சிறையில் இருக்கும் பெனிங்னியோவை சந்திக்கிறார். பெனிங்னியோ தன் காதலி பற்றி அறிந்து வரும் படியும் அலிசியாவிருக்காக தான் தயார் செய்த தன்வீட்டில் தாங்கிக்கொள்ளும் படியும் வேண்டுகிறார்.அங்கு தங்கும் மார்கோ எதிரில் நடனப்பள்ளியில் அலிசியா அமர்ந்திருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சி அடைகிறார்.
.பெனிங்னியோவின் வக்கிலிடம் இதுபற்றி கேட்கிறார்.அவரும் அலிசியாவிருக்கு குழந்தை இறந்து பிறந்ததென்றும் அதனால் அவர் சுய நினைவுக்கு வந்ததையும் கூறுகிறார்.ஆனால் பெனிங்னியோவிடம் அலிசியா இறந்து விட்டதாக சொல்லப்போவதாக கூறுகிறார்.சரியென்று வீடு திரும்புகிறார் மார்கோ.மறுநாள் காலை தனது செல்லுக்கு வரும் தகவலை பார்த்து ஜெயிலுக்கு ஓடுகிறார் மார்கோ.தன் காதலி இல்லாத உலகத்தில் தனுக்கும் வாழ விருப்பமில்லை எனக்கூறி ஒரு கடிதம் எழுதி விட்டு தூக்கமாத்திரைகளை உண்டு இறந்து விடுகிறார் பெனிங்னியோ.அலிசியாவின் நினைவாக வைத்திருந்த கிளிப்பை பெனிங்னியோவின் கல்லறையில் வைத்து அஞ்சலி செலுத்துவார் மார்கோ.ஒருநாள் நாடக நிகழ்ச்சிக்கு செல்லும் மார்கோ வழக்கம் அழுதுகொண்டு நாடகம் பார்க்கிறார் அதை பின்னாலிருந்து கொண்டு ஒரு பெண் பார்த்துக்கொண்டிருப்பார்.இடைவேளையின் போது.தன்னை பார்த்துக்கொண்டிரும் அந்தப்பெண்ணை திரும்பிப்பார்க்கிறார் மார்கோ.அதிர்ச்சி அடைகிறார்.தன்னை பார்த்துக்கொண்டிருந்தது அலிசியாவும் அவரது ஆசிரியையும் என்பதை அறிகிறார்.இடைவேளையில் மார்கோவை யாரென்று அறியாத அலிசியா நலமா என்று கேட்கிறார்.இதை பார்த்து அதிர்ச்சி அடையும் ஆசிரியையிடம் பெனிங்னியோ இறந்ததை தெரிவிக்கிறார் மார்கோ.இடைவேளைக்கு பின் நாடகம் தொடர அவ்வப்போது திரும்பி அலிசியாவை பார்த்தபடி இருக்கிறார் மார்கோ.பெரும் ஒளி அலிசியாவின் மீது படர படம் நிறைவடைகிறது.

2002 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்கியவர் பெத்ரோஅல்மதோவர்.இவரைப்பற்றி அறிய எஸ்.ரா அவர்களின் இந்த வலைப்பதிவை பார்க்கவும்.


உலக சினிமா என்றொன்று இருப்பதே ஆவியில் செழியன் எழுதி வெளிவந்த உலக சினிமா படித்த பிறகே அப்படி ஒரு சினிமா உலகம் இருப்பதே எனக்குத்தெரியும் அந்த வரிசையில் நேற்று நான் பார்த்த படம் சில்ட்ரன் ஆஃப் ஹெவன்.அந்த தொடரில் நான் முதன் முதலில் வாசித்தது இந்தப்படம் தான்.அன்றிலிருந்து இப்படத்தை வாங்குவதருக்கு முயற்சி செய்தேன்.இப்போது தான் கிடைத்தது.

சிறிய குழந்தைகளுக்கான பழைய சூவை ஒரு முதியவர் தைத்தபடியே காட்சி ஆரம்பம் ஆகிறது.அந்த சூவை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு தேவையான காய்கறிகள் வாங்கிக்கிகொண்டு வீட்டுக்கு செல்கையில் சூ தொலைந்துவிடுகிறது.காய்கறிக்கடையில் பழைய குப்பை எடுப்பவர் தவறுதலாக சூவையும் எடுத்து சென்றுவிடுகிறார்.சிறுவன் அலி சூ இல்லாமல் வீடுவந்து சேர்கிறான்.வீட்டில் உடல் நலம் சரியில்லாத அவனது தாய் வாடகை மற்றும் மளிகை கடை சரியான தொழில் இல்லாத அவனது தந்தை. சூ வாங்க முடியாத மோசமான சூழ்நிலையில் அவனது குடும்பம்.

அலியின் தங்கை ஜாரா நாளை பள்ளிக்கு தான் சூவணிந்து செல்லவேண்டும் என்பாள்.அதனால் தனக்கு சூவைத்தரும் படி வேண்டுவாள் இல்லாவிட்டால் தந்தையிடம் சொல்லுவதாக சொல்லுவாள்.அலி தனது குடும்பச்சூழ்நிலையை விளக்கி தனது சூவை அணிந்துகொண்டு பள்ளிக்கு செல்லுமாறு கூறுவான்.அப்பாவிற்கு தெரியாமல் இருவரும் நோட்டில் எழுதி எழுதி பேசிக்கொள்வதாக காட்சியமைக்கப்பட்டிருக்கும்.

காலையில் ஜாரா அலியின் சூவை அணிந்த்துகொண்டு பள்ளிக்கு செல்வாள்.மதியம் ஓடோடிவந்து அண்ணனுக்கு தருவாள்.பாதிவழியில் நிற்க்கும் அலி சூவை பெற்றுக்குகொண்டு பள்ளிக்கு ஓடுவான்.
அதனால் அவன் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்ப்படும்.முதல்நாள் தாமதமாக வருவதை அவனது தலைமை ஆசிரியர் பார்ப்பார் விட்டுவிடுவார்.ஒருநாள் ஜாரா பள்ளி விட்டுத்திரும்பும் போது சூ தவறுதலாக சாக்கடையில் விழுந்துவிடும்.அதை எடுக்கமுடியாமல் தவிப்பாள்.அதை பார்க்கும் ஒரு பெரியவர் அவளுக்கு உதவுவார்.சூவை எடுத்துக்கொண்டு போய் அலியிடம் சேர்ப்பாள்.இதன் காரணமாக பள்ளிக்கு தாமதமாக செல்லும் அலி தலைமை ஆசிரியரிடம் மாட்டிக்கொள்வான்.சூ ஈரமாக இருப்பதற்கான காரணங்களை கேட்டுவிட்டு இனிமேல் தாமதமாக வரக்கூடாது என்று சொல்லி அனுப்புவார்.

பள்ளியில் அலி நன்றாக படித்ததற்காக அவனுக்கு அவன் வகுப்பாசிரியர் ஒரு பேனா பரிசளிப்பார்.அதை தனது தங்கை ஜாராவுக்கு அளிப்பான் அலி.ஜாராவின் சக பள்ளி மாணவி தன்னுடைய சூவை அணிந்த்திருப்பதை பார்க்கிறாள்.அந்த சூவை பார்த்துக்கொண்டே அவளை பின்பற்றி அவளது வீடுவரை சென்றுவிட்டு திரும்புவாள்.அதனால் அலி பள்ளி செல்வதில் தாமதம் ஏற்ப்படும்.மீண்டும் தலைமையாசிரியரிடம் மாட்டிக்கொள்வான்.இந்த முறை அவனை வெளியே அனுப்பிவிடுவார் அப்போது அங்கு வரும் அவனது வகுப்பாசிரியர் அவானுக்காக பரிந்து பேசி அழைத்துப்போவார்.

ஜாரா அண்ணன் அலியை அழைத்துக்கொண்டு தன்னுடன்பயிலும் மாணவியின் வீட்டுக்கு அலைத்துப்போவாள்.அவர்கள் ஒளிந்திருந்து அவள் வீடையே பார்த்துக்கொண்டிரிருப்பார்கள்.அப்போது பார்வையற்ற தன் தந்தையை அழைத்துக்கொண்டு வியாபரத்திருக்கு வெளியே கிளம்புவாள்.அந்தக் காட்சியை பார்த்த இருவரும் ஒன்றும் பேசாமல் வீடு திரும்புவர்.

ஒருநாள் வெள்ளிக்கிழமை ஏதாவது தோட்ட வேலை கிடைக்கிறதா என்று பணக்கார்கள் வசிக்கும் பகுதிக்குள் அலியும் அவன் தந்தையும் வேலை தேடுகிறார்கள்.ஒரு வேலையும் கிடைக்காத சமயத்தில் அலியின் சாமர்த்தியத்தால் ஒரு வீட்டில் வேலை கிடைக்கிறது.அவர் எதிர்பாராத அளவு பணமும் கிடைக்கிறது.வீட்டிற்க்கு போகும் வழியில் தந்தை சைக்கிளை மித்த்தபடி பல கனவுகளுடன் செல்கிறார்.வீட்டுக்கு தேவையான பொருட்களை பட்டியலிடுகிறார்.சைக்கிளின் முன் தண்டில் அமர்ந்திருக்கும் அலி அதைக்கேட்டுக்கொண்டே அப்படியே தங்கை ஜாராவுக்கும் ஒரு சூ வாங்க வேண்டும் என்கிறான்.சரி என்றபடியே ஒரு இறக்கத்தில் சைக்கிளில் வேகமாக செல்கிறார்.அப்போது எதிர்பாராத விதமாக பிரேக் பிடிக்காமல் நிலைதடுமாறி இருவரும் கீழே விழ இருவரும் சோகமாக வீடு திரும்புகிறார்கள்.

அண்ணன் அலி பரிசாக அளித்த அந்த தங்க நிரப்பேனவை கீழே தவற விடுவாள் ஜாரா
அதை அந்த ஜாராவின் சூவை அணித்துள்ள பெண் எடுத்துக்கொடுப்பால்.அதிலிருந்து இருவரும் நட்ப்பாகிவிடுவர்.ஒருநாள் புது சூவுடன் வரும் அவளைப்பார்த்து எங்க அந்த பழைய சூ என்று அவள் புது சூவை பார்த்தபடி கேட்பாள்.அவளும் பழையது தன்னிடம் இல்லையென்றும் தனது தந்தை புதிதாக வாங்கித்தந்ததைப்பற்றி கூறும்போதே ஜாரா கோவமுடன் அங்கிருந்து விலகுவதை காரணம் புரியாமல் மலங்கமலங்க விழித்தபடி பார்த்து நிற்ப்பாள் அந்தச்சிறுமி.

பள்ளிகளில் அளவில் நடக்கும் ஒரு மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்வதாகவும் அதில் தான் மூன்றாம் இடம் பெறுவதாகவும் தன் தங்கையிடம் கூறுவான் அலி.ஏன் மூன்றாம் இடம் என்றதற்கு அந்த இடத்திருக்குத்தான் ஒரு ஜோடி சூக்கள் பரிசு என்பதால் தான் மூன்றாம் இடம் வரப்போவதாக உறுதியளிக்கிறான்.அடுத்தநாள் ஓட்டப்பந்தையத்தில் அலிஒடத்துவங்குகிறான்.அப்போது ஜாரா தன் அண்ணனுக்காக சூவுடன் ஜாரா ஓடிவருவது போல பின்னணியில் இசை ஒலிக்கப்படுகிறது.அலிக்கும் ஜாராவுக்கும் நடக்கும் உரையாடல்கள் அவன் நினைவில் வந்துதுவந்து போகிறது.வெற்றிக்கோட்டை நோக்கி சக மாணவர்களுடன் போட்டிபோட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறான்.

முடிவில் அலி போட்டியில் தான் நினைத்த மூன்றாவது இடத்தை அடைந்தான இல்லையா என்பதை வெகு அற்ப்புதமாக காட்சியாக்கப்பட்டிருக்கும்.அலி மற்றும் ஜாராவாக நடித்த சிறுவர்கள் இருவரும் அக்கதா பாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டினார்கள் என்றே கூறவேண்டும்.இரான் என்றால் செல்வச்செழிப்பான நாடு அங்கு ஏழைகளே இருக்க வாய்ப்பில்லை என்றெண்ணிய என்போன்றவர்களின் எண்ணத்தை தகர்த்தெறியும் படம்.அந்நாட்டில் வாழும் விளிம்பு நிலை மனிதர்களின் நிலையை காட்சிகளினூடே மெல்லிய இசையுடன் தெளிவாக சொல்லிஇருப்பார் படத்தின் இயக்குனர் மஜித் மஜிதி.

இப்படத்தை பெற விரும்புவோர் 9841898145 கௌத் என்பவரை தொடர்புகொள்ளவும்.பீச் ஸ்டேஷன் அருகில் இவரது கடையுள்ளது.இவரிடம் அனைத்து உலக சினிமாவும் கிடைக்கிறது.ஈரோட்டில் இருப்பவர்கள் நந்து அண்ணாவை தொடர்புகொள்ளவும்.அவரது நண்பர் மாதம் ஒருமுறை ஒரு படம் திரையிடுகிறார்.அதற்காக வருட சந்தாவகா ஒரு சிறிய கட்டணம் நிர்னைத்திருக்கிறார்.விருப்பமுள்ளவர்கள் அதில் உறுப்பினர் ஆகலாம்.

நான் ரசிக்கும் சில சினிமா பற்றிய பதிவுகள்; அய்யனார்,மோகன்தாஸ்,பிரவீன், மதி ,லேகா........

சமீபத்தில் கேட்ட பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது.

திரைப்படம்:சுப்ரமணியபுரம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடல்: தாமரைகண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
எனை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
எனை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு ஓடி மறைந்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகர்வேன் ஏமாற்றி

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லயே இதில் ஓசை இல்லயே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
எனை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
எனை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு ஓடி மறைந்தாய்

கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத‌
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத‌
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்

உன்னை இன்றி வேறோர் நினைவில்லை
இனி இந்த ஊணுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வாழ‌

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
எனை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
எனை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு ஓடி மறைந்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகர்வேன் ஏமாற்றி

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லயே இதில் ஓசை இல்லயே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே.

நன்றி.
பண்புடன்

இந்த மாசம் PIT க்கு நம்ம படம்

இது ஈரோடு புகழ் காங்கயம் காளையை போற்றும் விதமாக அமைக்கப்பட்ட சிலை.
எங்க ஊரு ரயில் நிலையம் அருகில் உள்ளது.தினமும் இதை கடந்துதான் நாங்கள் போய்வரவேண்டும்.இதுவரை இரு நாவல்களை மட்டுமே ஒரு நாளில் படித்துள்ளேன்.முதலாமாவது அமரர் சுஜாதா அவர்களின் கொலையுதிர்காலம்,சோளகர்தொட்டி.மூன்றாவதாக இந்த எரியும் பனிக்காடு.ஆங்கிலத்தில் Red Tea என்னும் பெயரில் திரு.பி.எச்.டேனியல் அவர்களால் 1969 ஆம் வருடம் எழுதப்பட்டது.இக்கதை 1920-30 இடைப்பட்ட காலங்களில் வால்ப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள (ஆனைமலை,டாப்சிலிப்,மூனாறு) பகுதிகளில் வெள்ளையர்கள் ஆட்சியில் நம்மவர்களுக்கு தேயிலைத்தோட்டங்களில் இருந்த நிலையை மிகத்துல்லியமாக ஆசிரியர் விளக்கியுள்ளார்.இந்நாவலை தமிழில் இரா.முருகவேள் மொழிபெயர்த்துள்ளார்.


ஆனைமலைக் காடுகளில் தழைத்திருக்கும்
ஆங்கிலேயர்களின் தேயிலைத் தொட்டாங்களில்
அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்
நீங்கள் கதகதப்பாய் உறுஞ்சிக் குடிக்கும்
ஒவ்வொரு துளி தேனீரிலும்
கலந்திருக்கிறது எமது உதிரம்
-ஆதவன் தீட்சண்யா

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மயிலம்பாடி எனும் கிராமத்தில் வாழும் கருப்பன் மற்றும் குடும்பத்தார் வாழ்கின்றனர்.முப்பதுக்கும் மேற்ப்பட்ட வீடுகளை கொண்ட அக்கிராமத்தில் மிக மோசமான பஞ்சம் ஏற்ப்படுகிறது.ஊரில் ஏதும் வேலை இல்லாததனால் அருகில் உள்ள நகரமான கயத்தாருக்கு சென்று வேலை தேடுகிறார்.ஒருவேலையும் கிடைக்காத சலிப்பில் சங்கரபாண்டி என்பவரது அறிமுகம் கிடைக்கிறது.அவர் தான் மலையில் உள்ள எஸ்டேட்டில் மேஸ்திரியாக இருப்பதாகவும்.அங்கு வந்தால் நிறையா சம்பாதிக்கலாம் என்றும் சொல்கிறார்.தானும் முதலில் கூலிக்கு சென்று நாலைடிவில் மேஸ்திரியானதாகவும் அங்கு வேலைக்கு வந்தால் கருப்பனும் தன் மனைவியுடன் அங்கு வந்தால் அதுபோல சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார்.கருப்பனை தனது ஏஜென்டிடம் அழைத்து சென்று கருப்பனுக்கும் அவர் மனைவுக்கும் சேர்த்து 40 ருபாய் முன்பணம் வாங்கிக்கொடுத்து வீட்டிருக்கு சென்று அவர்களிடமும் கலந்தாலோசித்து வந்து பதில் கூறுமாறு சொல்கிறார்.

கருப்பனும் தனது குடும்பமும் சாப்பிட்டு சில தினங்கலானதால் இன்றிரவாவது அம்மைக்கும் மனைவிக்கும் சாப்பிட வாங்கிக்கொண்டு வீட்டுக்கு செல்கிறார்.முதலில் அம்மாவும் மனைவியும் மறுக்கின்றனர்.மாலை நேரத்தில் ஒரு கோடங்கி அவர்கள் வீட்டருகில் வந்து நல்ல சகுனமாக சொல்லவும் அனைவரும் திருப்த்தி அடைகின்றனர்.அந்தக் கோடங்கி சங்கரபாண்டியிடம் சென்று பணம் பெறுகிறார்.வள்ளிக்கு விருப்பமில்லை.இருந்தாலும் வறுமை காரணமாக ஒத்துக்கொள்கிறார்.

எவ்வளவு அழகான முகமுடி பூண்டிருக்கிறது
இந்த
நகரம்....
.
மர்சென்ட் ஆப் வெனிஸ்
-ஷேக்ஸ்பியர்
(இப்படி சிறு வரிகள் மூலமாக இந்த அத்யாயத்தில் நடக்கப்போவதை ஆசிரியர் நமக்கு உணர்த்துகிறார்)

இவர்களைப்போல் ஒரு குழுக்களையே திரட்டிக்கொண்டு இரண்டு நாள் பயனத்திருக்கு பின் பொள்ளாச்சி வழியாக வால்ப்பாறை வந்து சேருகின்றனர்.எஸ்டேட்க்கு வந்த பின்புதான் அவர்களுக்கு புரிகிறது.இங்கு வாழ்வது எளிதானதல்ல என்று.திரும்பியும் போக முடியாது அப்படிப்போவதானால் சங்கரபாண்டியிடம் பெற்ற முன்பணம் பயணச்செலவு பணம் மொத்தம் அறுபதும் கொடுத்துவிட்டுத்தான் செல்லவேண்டும்.அதனால் ஓராண்டு அங்கேயே வேலை பார்க்க வேண்டும்.இப்படி வந்தவர்களையெல்லாம் ஒரு லைன்னில் தங்க வைக்கப்படுகிறார்கள்.வாழவே தகுதி இல்லாத ஒரு இடத்தில் அவர்கள் அமர்த்தப்படுகிறார்கள்.பெண் பித்து பிடித்தலையும் வெள்ளையர்களின் ஆசைக்கு இணைக மறுப்பதால் வள்ளி படும் துயரங்கள் ஏராளம்.அவளது கூலி பணம் முதல் கொண்டு ஏமாற்றப்படுகிறது,

செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் மழை பொழிய ஆரம்பித்துவிடும் ஒரு மாதமானாலும் கூட மழை நிற்காமல் பெய்கிறது.அதன் கூடவே ரத்தை உருஞ்சும் அட்டைப்புளுக்களும் வரும்.எவ்வளவு மழை பெய்தாலும் குளிரடித்தாலும் புழுக்கள் கடித்தாலும் அவர்கள் வேலை வாங்கப்படுவர்.மழைக்கு பிறகு சற்றே இடைவெளி விட்டு ஒரு வகையான காய்ச்சல் பரவும் போதுமான மருத்துவ வசதி இல்லாததனால்.
வருடத்திற்கு பாதிபேர் இறக்க நேரிடுகிறது.இதற்க்கு பயந்து தப்பி செல்பாவர்களும் பாதிவழியிலேயே இறந்துவிடுவர்.இந்த சமயத்தில் கூட இவ்விரக்கம் மில்லாமல் கூலிகள் வேலை வாங்கப்படுவர்.

இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில் தாமஸ் எனும் மருத்துவர் அங்கு பணியில் அமர்த்தப்படுகிறார்.அவர் படித்த மருத்துவர்.வெல்லையனைக்கண்டால் சூக்களை கலட்டி விட்டு தொப்பியை எடுத்துவிட்டு சலாம் துறை அவர்களே என்று சொல்லவேண்டும்.ஆனால் இவர் மட்டும் அப்படி செய்யவில்லை.மாறாக வெல்லையனைப்பார்த்து Good Morning Sir என்று கூறுவர்.இதை அவர்களால் ஜீரணிக்க முடியாது.இருந்தாலும் வேறு மர்த்துவர் இல்லாததால் அடங்கிப்போவர்

தாமஸ் அங்கு வேலையில் சேரும் நேரத்தில்.ஏற்க்கனவே மூன்று முறை கரு கலைந்திருந்த வள்ளி இப்போது மறுபடியும் கருவுற்றிரிப்பால்.அந்த சமயத்தில் காயிச்சலும் வேறு தாக்கியிருக்கும் இந்த மோசமான நிலையிலும் வள்ளி வேலைக்கு அனுப்பப்பட்டதால் நோயின் சீற்றம் மேலும் அதிகமாகிருக்கும்.நோய் குணமாக முன்பணமாக பத்து ருபாய் பெற்று மந்திரவாதியிடம் தாயத்து வாங்கி கட்டி மேலும் கடனாளி ஆகிருப்பன் கருப்பன்.இரண்டாண்டு அடிமை வாசத்திருக்கு பின்னர் அந்நோயிலிருந்து மீண்டு வள்ளியும் கருப்பனும் ஊர் வந்து சேர்ந்தார்களா என்பதே முடிவு.

அங்கிருக்கும் எழுத்தர்கள் பேசிக்கொள்வது போல பல தகவல்களை ஆசிரியர் நமக்குத்தருகிறார்.அப்பாவும் தாமசும் பேசும் போது அப்பாவு:இங்கிருக்கும் ஒவ்வொரு தேயிலை செடியிலும் மூன்று கூலிகளின் உயிர் அடங்கிருக்கிறது என்பார்.லண்டனிலிருந்த வெள்ளையர்கள் பணம் சம்பாதிக்க இங்க படிப்பறிவில்லாத ஏழைக் கூலிகளின் உயிர் விலையாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

புத்தகம்:எரியும் பனிக்காடு (Red Tea)
வெளியீடு :விடியல் பதிப்பகம்
விலை :150.

இந்த மாத புகைப்பட போட்டிக்கான எனது படம்.
குருவி

குருவி Vs தெலுங்கு சத்ரபதி.அந்த தெலுங்கு படத்துல இருந்து அப்படியே ஒரு காட்சி கூட உடாம அப்படியே தமிழ்ல பண்ணிருக்காங்க.இதுக்கு கம்முனு டப் பண்ணிருக்கலாம் நேரம் இருந்தா இதக்கொஞ்சம் பாருங்க.

PIT

இம் மாத புகைப்பட போட்டிக்கான படம்
அமரர் சுஜாதாவின்
விஞ்ஞானச் சிறுகதைகள் தொகுப்பை படிக்கும் போது அதில் எனக்குப் பிடித்த ஒரு சிறுகதை.

பாண்டவர்களுடைய பன்னிரண்டு வருஷ வனவாசம் முடியும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது.இன்னும் கொஞ்சநாள் இன்னும் கொஞ்சநாள் என்று மறைந்து மறைந்து,மருகி மருகி சீற்றமெல்லாம் நேரம்வரக் காத்திருக்க அந்தக் கடைசி நாட்களில் இது நிகழ்ந்தது.


காட்டில் வாழ்ந்த ஓர் பிராமணனின் அரளிக்கட்டையின் மேல் ஒரு மான் உடலைஉராயிந்து விட்டு செல்லும் போது அதன் சிக்கலான கொம்பில் கட்டை மாடிக்கொண்டுவிட்டது.மான் ஓடிப்போய்விட்டது.

வேறு வேலை இல்லாத பாண்டவர்கள் மான் துரத்தும் பயிற்சி இல்லாததால் அந்த மான் இவர்களுக்கு தண்ணி காட்டியது.மான் எதோ மாய மான் போலும்.துள்ளிக்குதித்து ஓடிய மான் அவர்களை காட்டில் வெகு தொலைவில் அழைத்துக்கொண்டு போய் விட்டது.மானும் மறைந்தது.மானைக்கானமல் அதிகதூரம் ஓடியதனால் இவர்கள் ஐவருக்கும் ஏகக்களைப்படந்தனர்.

ஒரே தாகம்.ஒரு மரத்தடியில் அமர்ந்தனர்.நாக்கு வறண்டு போனது.நகுலன் நொந்துகொண்டன்.ஒரு மானை பிடிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டோம் என்ன ஒரு தாழ்ச்சி என வருந்தினான்.அதற்கு பீமன் திரௌபதியை துகிலுரித்த நீசர்கள் கொல்லாமல் பார்த்ததை விட இது தாழ்ச்சியா என்று தன் மூச்சிரைப்புக்கு இடைய சொன்னான்.அதற்கு அற்சுனணன் அந்த தேரோட்டியின் மகன் சொன்னதை கேட்டு சும்மா நின்றோம்.அதை விடவா என்றான்.


எல்லாரும் களைப்பினால் பொறுமை தைரியம் எல்லாம் இளந்திருப்பதை உணர்ந்த தர்மர் பேச்சை மாற்றுவதற்கு நகுலனிடம் சும்மா பேசிக்கொண்டே இருக்காதீர்கள்.இப்போது நம் எல்லோர்க்கும் தாகம்.நாகுலனை நோக்கி மரத்தின் மேல்யேறி எங்காவது நீர் தெரிகிறதா பார் என்று ஆணையிட்டான்.
நகுலன் ;ஏன் இவன் ஏறமாட்டானா நாந்தான் கேடச்ச்சனா என மொனகியபடி ஏறினான் சற்று தூரத்தில் நீர் இருப்பதை கண்டான்.அண்ணா பக்கத்தில்லான் இருக்கிறது என்றான் சற்று உற்சாகத்தோடு.

உடனே போய் நீர் எடுத்து வா நகுலன் தன் தாக மிகுதியால் அங்கே விரைந்தான்.அங்கு ஒரு அழகான பொய்கை இருந்தது.தன் தாக்கத்தை தனித்த பிறகு அம்புத்தூணியிலும் நீர் நிறைத்துக்கொள்ளலாம் என எண்ணியபடி பொய்கையில் இறங்கினான்.நிர்மலமான நீரில் கைவைத்ததும் 'நில் !" என்று ஒரு அசரீரி கேட்டது.நகுலன் சுற்றுமுற்றும் நோக்கினான்.
சாகசம் செய்யாதே இந்தக்குலம் என்னுடையது.நான் சில கேள்விகள் கேப்பேன் பதிலளித்துவிட்டு தண்ணீரைக் குடி,அந்தக்குரல் ஆகாய்த்திளிருந்தா,மரத்திளிருந்தா,எங்கிருந்து வருகிறது ?
நகுலன் திடுக்கிட்டான்,இருந்தும் ஒரே தாகம்.தண்ணீர் குடித்துவிட்டு பிறகு பதில் சொல்லலாம் என்று இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி பருகினான் கரை ஏறியதும் மயங்கி கீழே விழுந்தான்.
தர்மனுக்கு சென்றவன் திரும்பவில்லை என்ற கவலை சகாதேவனை அனுப்பி பார்த்துவரச்சொன்னான்.
சகாதேவன் சென்று நகுலன் விழுந்து கிடப்பதைப்பார்த்து திடுக்கிட்டான்.திரும்பிச்செல்கையில் குளத்த பார்த்தன்.தண்ணீரின் கவர்ச்சி,தாகம் இரண்டும் சேர்ந்து நீரை பருகத்தோன்டச்செய்தது.குளத்தின் அருகில் சென்றான்.
மீண்டும் அசரீரி "சகதேவா இது என் பொய்கை.என் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு பிறகே தாகம் தீர்த்துக்கொள்ளலாம்.சகாதேவன் எச்சரிக்கையை புறக்கனித்தான்,நீரை பருகினான்,மயங்கி விழுந்தான்.

சாகதேவனும் திரும்பி வராது கண்டு கவலையடைந்த தர்மன் அருசுனணனை சென்று பார்த்துவச் சொன்னான்.அங்கு சென்று பார்க்கையில் இருவரும் மயங்கியநிலையில் இருந்தனர்.திடுக்கிட்டு பொய்கையை பார்த்தான்.அதை அணுகினான்.மீண்டும் அசரீரி முதலில் என்கேள்விகளுக்கு பதில்தா பின்பு நீரருந்தலாம்.இல்லையேல் உன் தம்பிகளுடன் நீயும் மடிவாய்"என்றது.அர்ச்சுனன் பதிலளிக்கும் முன் அவனை தாகம் ஆட்கொண்டது.நீரை பருகினான்,மயங்கி விழுந்தான்.

தர்மனுக்கு மூவரும் திரும்பி வராத கவலை,தாகம்.பின்பு பீமனை அனுப்பினான்.எல்லாமே நமக்கு விரோதமாக இருக்கிறது.ஜாக்கிரதை!.பீமன் விரைந்தான்.கிட்டத்தட்ட பீமனுக்கும் அதே கதிதான்.அவனும் மயங்கி விழுந்தான்.

நால்வரும் திரும்பி வராதது கண்டு கவலை கொண்டான் தர்மன்.பலவாரக சிந்தித்த படியாக குளத்தை அடைந்தான்.அங்கு நால்வரையும் கண்டான்.வனவாசம் முடியும் சமயத்தில் இப்படி ஒரு சோதனையா.யார் இப்படி செய்திருப்பார்கள்.அருகில் சென்று பார்த்தான்.உடலில் காயம் ஏதுமில்லை.உறங்குபவர்கள் போல் படுத்திருந்தனர்.ஒருவேளை இது துரியோதனன் சதியாக இருக்கும் என எண்ணியபடி பொய்கையை கண்டான்.தம்பிகளை பிறகு பார்க்கலாம்.முதலில் தாக்கத்தை தணிக்கலாம் என்று பொய்கையில் இறங்கினான்.அசரீரி என் பேச்சை கேளாமல் உன் தம்பிகள் தண்ணீர் பருகினார்கள்.நீயும் அப்படி செய்யாதே தர்மா.என்கேள்விகளுக்கு பதில் தந்துவிட்டு பிறகு குடி.இது என் குளம்"என்றது.

தர்மனும் தாகத்தை பொருட்படுத்தாமல் சரி கேள் என்றான்.
வரிசையாக கேள்விக்கணைகளை தொடுத்தது.

எது தினமும் சூரியனை உதிக்கச் செய்கிறது ?
பிரம்மம்.
மனிதனுக்கு எப்போதும் துணை எது ?
தைரியம்.
பூமியைக்காட்டிலும் கனமானது எது ?
மக்களை தாங்கும் தாய்.
ஆகாயத்தைக்காட்டிலும் உயர்ந்தது எது ?
தந்தை.
அறிவை காட்டிலும் வேகமானது எது ?
மனம்..............
இப்படியாக தொடர்ந்து அது கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தான்.

தர்மனே! நீ எல்லாம் அறிவாய் என்பது தெரிகிறது.உனக்கு எதிர்காலமும் தெரியுமோ ?

தெரியும்.என்றான் தருமன்

உன் பதில்கள் என்னை திருப்திபடுத்திவிட்டது .உன் சகோதரர்களில் ஒருவன் பிழைக்ககூடும்.நீ யாரை விரும்புகிறாயோ அவன் பிழைப்பான்!.என்றது அசரீரி.

தருமன் யோசித்தான்."அசரீரியே!,யாரும் பிழைக்க வேண்டாம்" என்றான்.

என்னது?" என்று திடுக்கிட்டது அந்தக் குரல்

அர்ப்பனே ! நான் எல்லாம் அறிவேன்.எதிர்கால விஞ்ஞானமும் ரசாயனமும் எனக்கு அத்துப்புடி.என் சகோதரர்கள் இறக்கவில்லை.மயக்கத்தில் இருக்கிறார்கள்.நான் சுனையில் இறங்கிய போதே தெரிந்து கொண்டேன்.சுனையருகில் மிக லேசாக கார்பன் மானாக்ஸைடு இருக்கிறது.மேலும் சுனை தண்ணீரில் லேசாக தாயோ மெண்ட்டோன் கலந்திருக்கிறது.இவை மிகக்குறைந்த அளவில் கலந்திருப்பதால் உயருக்கு ஆபத்தில்லை.கரைக்கு வந்து நல்ல காற்றை சுவாசித்தால் போதுமானது.தேவை என்றால் டெக்ஸ்ட்ரோஸ் அதிகப்படியாக உள்ள சில பழங்களை கொடுத்தால் குணமாகிவிடுவார்கள்.மரத்தில் ஒளிந்து கொண்டு வெவ்வேறு திசைகளில் குரல் கொடுக்கப் பழகிய அசரீரியே,உன் கேள்விகள் சுவாரஸ்யமாக இருந்தன.நன்றி"என்று சொல்லிவிட்டு தன் சகோதரர்களை பார்க்க சென்றான்.

-ராஜாஜியின் 'வியாசர்விருந்து'
புத்தகம் :விஞ்ஞானச் சிறுகதை

தமிழுக்கு அமுதென்று பேர்
எனக்கு மிகவும் பிடத்த பாடல்களில் இதுவும் ஒன்று.எனது சிறுவயதில்
சென்னை தொலைக்காட்சில் வந்த ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் இந்தப்பாடல்ஒளிபரப்பாக கேட்பேன்.பாவேந்தரின் இவ்வரிகள் எனது பாடத்தில் வந்ததால்இப்பாடல் வரிகள் எனது மனதில் எளிதாக பதிந்தது.தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!


-பாவேந்தர் பாரதிதாசன்

நன்றி தமிழ்நெஞ்சம்

ஆணிவேர்

ஆணிவேர்எங்களது உயிர்கள் எடுக்கப்படும் கணப்பொழுதுகளில் என்ன செய்துகொண்டிருப்பீர் தோழரே..? ஓர் அழகிய பாடலின் ஆரம்ப வரிகளை முணுமுணுத்துக் கொண்டிருப்பீரோ...?

ஆணிவேர் படம் பண்புடனில் நண்பர் அளித்த சுட்டி.இப்படம் ஈழத்தில் கிளிநொச்சி பகுதில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டது.நமது தமிழ் நடிகர்களான நந்தாவும் மதுமிதாவும் நடித்த படம்.இப்படம் நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.தடை செய்வதற்கான காரணம் ஏதும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.

Double Click on the Video Player to view fullscreen. PART 01 - 03

download link PART 01
PART 02
PART 03

இதை தட்டச்சு செய்யும் போது நேரம் சரியாக 2.30 am

இன்று புனித வெள்ளி அதனால் விடுமுறை சனி ஞாயிறு வார விடுமுறை மொத்தம் மூன்று நாள் விடுமுறை அதனால் நானும் நண்பர் வால்பையனும் இரண்டு நாள் பயணமாக பெங்களூர் செல்லலாம் என்று முடிவு செய்தோம்.முதலில் இணையத்தில் முன்பதிவு செய்தோம்.திரும்பி ஞாயிறு காலை வருவதாக முடிவு செய்து.பின்பு போவதற்கும் சேர்த்து முன்பதிவு செய்துவிட்டேன்.

அப்புறமாக வெள்ளிக்கிழமை நேரமாக கோலார் முடித்துவிட்டு பின்பு மதியத்திருக்கு மேல் பெங்களூர் முடித்துவிட்டு அங்கேயே தங்கிவிட்டு அடுத்தநாள் உடுப்பி அல்லது பெல்காம் சென்று திரும்பலாம் என்று முடிவு.அதனால் முதலில் ஞாயிறு பயணச் சீட்டை ரத்து செய்தேன்.அந்த பணமும் என் வங்கிக்கணக்கில் இதுவரை வந்து சேரவில்லை.சரி வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

12.30am க்கு மழை வேறு அதிலேய கிளம்பி தொடர்வண்டி நிலையம் வந்துசேர்ந்தோம்.
இந்த வால்பையன் வேறு சரக்கில் இருந்தார்.1 am மணிக்கு வண்டி முதலாவது பிளாட்பாரத்தில் வண்டி வருமன்று காத்திருந்தோம்.அதற்குள் தலைவருக்கு போன் வேறு வந்துவிட்டது.நான் கேட்டுட்டு வரன்னதுக்கும் வேணாம்னு சொல்லிட்டார்.எனக்கு சந்தேகம் அதனால் என்கொயரியில் விசாரித்ததில் வண்டி இப்போதுதான் இரண்டாவது பிளாட்பாரத்தில் கிளம்பியதாக சொன்னார்.

வந்து தலைவரை கூப்பிட்டேன் வீட்டுக்கு போலாம்னு.அவரு நம்பலை.அவர்களிடம் சென்று சண்டை வேறு ஒன்னாவது ப்லட்பாரதுல வரும்னு சொல்லிடு.இப்போ இரண்டவதுல போயிடுச்சுன்னு சொல்லுறதா எதுக்கமுடியதுன்னு சண்ட வேற.சரி விடுங்க பின்னாடி வர ராஜ்கோட் வண்டிய புடிச்சு போயிடலாம்னார்.நான் தா ஆணியே புடுங்க வேண்டாம். புடுங்குனது போதுன்னு திரும்பிட்டேன்.பயணச்சீட்ட ரத்து பண்ணலாம்னு வந்து பாத்த இந்த irctc காரங்க இரவு 11.30pm மணியோட அவ்வளவுதான் காலைல பாருனுட்டான்.கடைசியா சதர்ன் ரயில்வேவுக்கு தானம் கொடுத்ததுதான் மிச்சம்.


இதுலையும் ஒரு மீதி இருக்கு அங்க எப்படியும் பப்புல போயி பண்ணுற செலவு மீதிதான்.
ஏன்னா அடுத்தவாரம் போகும்போது இந்த தெண்டசெலவ சரிகட்ட அந்த செல்வ கட்ப்பண்ணிருவோம்ள.சரி இன்று பங்குனி உத்திரம் ஆதலால் இன்று ஊரிலேயே கொண்டாடுவோம் என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன்.சரக்கடித்தவருடன் பயணிக்கும் போது மற்றொருவர் தூங்கி வளியாமல் விளிப்போடிருப்பது நலம்.

படம் : அழகிய தீயே
பாடியவர் : ரமேஷ் விநாயகம்.
இசை : ரமேஷ் விநாயகம்

நேற்று றேடியோஸ்பதி இணையத்தில் பார்க்கும்போது
இந்த வார சிறப்பு நேயராக நண்பர் எம்.ரிஷான் ஷெரிப் அவர்களின் பாடல்கள் இடம் பெற்றிருந்தன.5 பாடல்கள் அனைத்தும் மிக அருமையான தேர்வுகள்.

அதில் அழகிய தீயே படத்தில் இடம் பெற்ற விழிகளின் அருகினில் வானம் பாடல் இடம்பற்றிருந்தது.என்னை மிகவும் கவர்ந்த பாடல்.இந்த படமும் இந்த பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இதில் வரும் வரிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிகழ்வை நினைவு படுத்துவதாக இருக்கும்.அதிலும் எனது நண்பன் பூபதிக்கு இந்தப்பாடல் என்றால் ஊயிர்.

//இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்! //

பெரும்பாலும் பெண்களைப்பார்க்கும் போது இந்த வரிகள் முணுமுனுப்பான்.

இதில் வரும் அனைத்துவரிகளும் என்னை மிகவும் கவர்ந்தவை.இரவில் பெரும்பாலும் இப்பாடலே ஓடிக்கொண்டிருக்கும்.இவ்வாரம் பெரும்பாலோனோர்க்கு இப்பாடலே பிடித்திருந்தது.

விழிகளின் அருகினில் வானம்...

படம் : அழகிய தீயே
பாடியவர் : ரமேஷ் விநாயகம்.
இசை : ரமேஷ் விநாயகம்

விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

பூ போன்ற கன்னி தேன்,
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்!
அது ஏன் என்று யோசித்தேன்!
அட நான் எங்கு சுவாசித்தேன்?
காதோடு மெளனங்கள்,
இசை வார்க்கின்ற நேரங்கள்,
பசி நீர் தூக்கம் இல்லாமல்,
உயிர் வாழ்கின்ற மாயங்கள்!
அலைகடலாய் இருந்த மனம்,
துளி துளியாய் சிதறியதே!
ஐம்புலனும், என் மனமும்,
எனக்கெதிராய் செயல்படுதே!
விழி காண முடியாத மாற்றம்!
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்!
ஒரு மெளன புயல் வீசுதே!
அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யா!

பூவில் என்ன புத்தம் புது வாசம்!
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்!
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்!
யாரோ என்று எந்தன் மனம் தேடும்!

கேட்காத ஓசைகள்,
இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்!
சொல் என்னும் ஓர் நெஞ்சம்!
இனி நில் என ஓர் நெஞ்சம்!
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்,
ஒரு போர்க்காலம் ஆரம்பம்!
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!

விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

என்னை எப்பொழுதும் தன்னிலை மறக்கச் செய்யும் பாடல் என்றால் இதுதான்.
ரமேஷ்விநாயகத்தின் மென்மையான குரல் பாடலை மேலும் அழகூட்டுகிறது.இப்பாடலைப்பாட ஒரு பிரபல பாடகர் வராத காரணத்தால் இப்பாடலை இவர் பாடநேர்ந்த்தாகக் கேள்விப்படுகிறேன்.ஆனாலும் சிறப்பாகப் பாடியிருக்கிறார்.இவரது இசையும் மிக ரம்மியம்.
அடுத்து வரிகள்..
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!

இப்பாடலை அனுப்பிய ரிஷான் அவர்களுக்கும் அதை வழங்கிய தல கான பிரபா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் 96 ஆம் ஆண்டு எனது 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது அரையாண்டுத் தேர்விற்கு பிறகு.எனது அக்கா ஊர் பொங்கலுக்கு சென்ற நான். ஒரு சுப முகுர்த்த வேளையில்.வாழ்க்கையில் முதன்முறையாக அந்த ஊர் நண்ப சிகாமனிகளுடன்.தலைக்கு ஒரு black night பீரும்.இரண்டு wills புகைப்பானும் வாங்கிக்கொண்டு போயி வைக்போருக்கடியில் மறைத்து வைத்துவிட்டு இரவில் பார்த்துக்கொள்ளலாம் என்றிருந்து விட்டேன்.அன்றிறவு அவ்வூரில் நாடகம் போட்டார்கள்.அதனால் எல்லோரும் அங்கு சென்றுவிட்டனர்.நாங்கள் மூவர் மட்டும் பீரை ஆறாம்பித்து விட்டு சிகரெட்டை பட்ரவைத்தோம்.ஒரே இருமல் புகை தலைக்கு ஏறியது.இரண்டு பப் அப்புறம் எல்லாம் சரியாகி விட்டது.பீரடித்தத்தில் மூவருக்கும் மப்பு ஜாஸ்தி ஆனமரி நினைப்பு.அப்படியே சென்று அவரவர் வீட்டிற்க்கு சென்று விட்டோம்.அடுத்தநாள் காலையில் நானும் ஈரோடு வந்துவிட்டேன்.இரண்டு நாட்களுக்கு பிறகு அக்காவும் மச்சானும் நடந்தவற்றை என்னிடம் கேட்டார்கள் முதலில் மறுத்தாலும் பிறகு ஒத்துக்கொண்டேன்.அக்கா தான் கவலைப்பட்டால் என் அப்பாவிற்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை.அவருக்கு தெரிய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்.அவர்கள் இருவரும் மாட்டிக்கொண்டதும் மரண அடிவிளுந்ததையும் அக்கா சொன்னால்.இனியும் இது தொடரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டால்.சில நாட்களுக்கு பின் புது நண்பர்கள் புதுப்புது உறவுகள்.எங்கும் புகை மயம்.ஒரு நாளைக்கு நான்கு சிகரட்களாக கடந்த 10 தாண்டுகளுக்கும் மேலாக எனது ஆறாவது விரல் போல உள்ளதை.கடந்த சில வாரங்களாக விடத்துடிக்கிறது.மனம் ஆனால் முடியவில்லை.ஒருமுறை சன் தொலைக்காட்சியில் காலை மலரில் ஒருநாள்.Dr.குருமூர்த்தி அவர்கள் பேசியதைக்கேட்டுவிட்டு ஒரு ஆறுமாத காலம் விட்டிருந்தேன்.மீண்டும் ஆரம்பம்.சிறு வித்தியாசம் அப்போது wills இப்போது kings அவ்வளவே.சுஜாதா கற்றதும் பெற்றதுமில் சில tips கொடுத்தார்.அதையும் பின்பற்றினேன்.சில நாட்களே மேலும் பல புதிய பழக்கங்கள் வந்து விட்டன.அதையெல்லாம் விடுவதற்குள் போது போதுமென்றாகிவிட்டது.

சில வாரங்களாக

CVR

பக்கங்களை நான் படிப்பதில்லை.கேன்சர் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறார்.ஒருவேளை (04th Feb புகையிலை ஒழிப்பு தினமால் கூட இருக்கலாம்) .அதனால் சிகரட் விட சொல்லி வலியுர்த்துவார்னு நானாக கற்பனை செய்துகொண்டு அந்தப்பக்கம் போவதில்லை.

சென்றவார ஆவியில் புகையோடு விளையாடி,எமனோடு உறவாடின்னு ஒரு கட்டுரை
படிப்பதற்கு ஒன்றும் இல்லாததால் சர்புதீன் அவர்களின் கட்டுரையை படிக்க நேர்ந்தது.சர்புதீன் மேற்கொண்ட தம் பழக்கத்தால் அவருக்கு குரல் வலையில் கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த கேன்சர் செல்லை அகற்றும் போது அவர் பேசும் திறனை இழந்து விட்டார்.இப்போது ஒரு கருவியின் உதவியுடன் பேசுகிறார்.இதனால் அவர் படும் துன்பங்களை கூறினார்.சில உரையாடலுக்கு பிறகு இவ்வாறான புள்ளி விவரங்களை குடுத்திருக்கிறார்.

2005 முதல் 2015 வரை தம் அடிப்பதினால் இரப்போரின் எண்ணிக்கை 84 மில்லியன்கலக இருக்குமென்கிறார்.பெரியவர்கள் தம் அடிப்பதினால் 700 மில்லியன் குழந்தைகள் சுவாசக்கோலாரால் பாதிப்படைகிரார்கலாம்.மற்றவர்களின் ஆரோக்கியத்தை கெடுக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை.இவ்வாறாக சர்புதின் அவர்கள் தனது பேட்டியை நிறைவு செய்திருக்கிறார்.

இந்த கடைசி ஒருவரி மட்டும் ஒரு உறுத்தலை ஏற்படுத்துகிறது.ஒன்று தம்மை நிறுத்த வேண்டும்.இல்லை NoSomking படத்தில் K வுக்கு ஏற்ப்படும் நிலை ஏற்ப்படவேண்டும்.


அதனால் இன்றுமுதல் நான் ஒருமுடிவுக்கு வந்துள்ளேன்.இனிமேல் பொது இடங்களில் புகைப்பதில்லை.எதாவது காடு கரைகளில் மட்டும் தொடர்வதென்று முடிவு செய்துள்ளேன்.என்னால் பிறர் பாதிப்படயக்குகூடாது.நான்கை இரண்டாக்கி,இரண்டை ஒன்றாக்கி,கடைசியில் முழுவதுமாக நிருத்திவிடவேண்டும்.

Visit the Site