இதை தட்டச்சு செய்யும் போது நேரம் சரியாக 2.30 am

இன்று புனித வெள்ளி அதனால் விடுமுறை சனி ஞாயிறு வார விடுமுறை மொத்தம் மூன்று நாள் விடுமுறை அதனால் நானும் நண்பர் வால்பையனும் இரண்டு நாள் பயணமாக பெங்களூர் செல்லலாம் என்று முடிவு செய்தோம்.முதலில் இணையத்தில் முன்பதிவு செய்தோம்.திரும்பி ஞாயிறு காலை வருவதாக முடிவு செய்து.பின்பு போவதற்கும் சேர்த்து முன்பதிவு செய்துவிட்டேன்.

அப்புறமாக வெள்ளிக்கிழமை நேரமாக கோலார் முடித்துவிட்டு பின்பு மதியத்திருக்கு மேல் பெங்களூர் முடித்துவிட்டு அங்கேயே தங்கிவிட்டு அடுத்தநாள் உடுப்பி அல்லது பெல்காம் சென்று திரும்பலாம் என்று முடிவு.அதனால் முதலில் ஞாயிறு பயணச் சீட்டை ரத்து செய்தேன்.அந்த பணமும் என் வங்கிக்கணக்கில் இதுவரை வந்து சேரவில்லை.சரி வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

12.30am க்கு மழை வேறு அதிலேய கிளம்பி தொடர்வண்டி நிலையம் வந்துசேர்ந்தோம்.
இந்த வால்பையன் வேறு சரக்கில் இருந்தார்.1 am மணிக்கு வண்டி முதலாவது பிளாட்பாரத்தில் வண்டி வருமன்று காத்திருந்தோம்.அதற்குள் தலைவருக்கு போன் வேறு வந்துவிட்டது.நான் கேட்டுட்டு வரன்னதுக்கும் வேணாம்னு சொல்லிட்டார்.எனக்கு சந்தேகம் அதனால் என்கொயரியில் விசாரித்ததில் வண்டி இப்போதுதான் இரண்டாவது பிளாட்பாரத்தில் கிளம்பியதாக சொன்னார்.

வந்து தலைவரை கூப்பிட்டேன் வீட்டுக்கு போலாம்னு.அவரு நம்பலை.அவர்களிடம் சென்று சண்டை வேறு ஒன்னாவது ப்லட்பாரதுல வரும்னு சொல்லிடு.இப்போ இரண்டவதுல போயிடுச்சுன்னு சொல்லுறதா எதுக்கமுடியதுன்னு சண்ட வேற.சரி விடுங்க பின்னாடி வர ராஜ்கோட் வண்டிய புடிச்சு போயிடலாம்னார்.நான் தா ஆணியே புடுங்க வேண்டாம். புடுங்குனது போதுன்னு திரும்பிட்டேன்.பயணச்சீட்ட ரத்து பண்ணலாம்னு வந்து பாத்த இந்த irctc காரங்க இரவு 11.30pm மணியோட அவ்வளவுதான் காலைல பாருனுட்டான்.கடைசியா சதர்ன் ரயில்வேவுக்கு தானம் கொடுத்ததுதான் மிச்சம்.


இதுலையும் ஒரு மீதி இருக்கு அங்க எப்படியும் பப்புல போயி பண்ணுற செலவு மீதிதான்.
ஏன்னா அடுத்தவாரம் போகும்போது இந்த தெண்டசெலவ சரிகட்ட அந்த செல்வ கட்ப்பண்ணிருவோம்ள.சரி இன்று பங்குனி உத்திரம் ஆதலால் இன்று ஊரிலேயே கொண்டாடுவோம் என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன்.சரக்கடித்தவருடன் பயணிக்கும் போது மற்றொருவர் தூங்கி வளியாமல் விளிப்போடிருப்பது நலம்.

பிடித்த பாடல்

படம் : அழகிய தீயே
பாடியவர் : ரமேஷ் விநாயகம்.
இசை : ரமேஷ் விநாயகம்

நேற்று றேடியோஸ்பதி இணையத்தில் பார்க்கும்போது
இந்த வார சிறப்பு நேயராக நண்பர் எம்.ரிஷான் ஷெரிப் அவர்களின் பாடல்கள் இடம் பெற்றிருந்தன.5 பாடல்கள் அனைத்தும் மிக அருமையான தேர்வுகள்.

அதில் அழகிய தீயே படத்தில் இடம் பெற்ற விழிகளின் அருகினில் வானம் பாடல் இடம்பற்றிருந்தது.என்னை மிகவும் கவர்ந்த பாடல்.இந்த படமும் இந்த பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இதில் வரும் வரிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிகழ்வை நினைவு படுத்துவதாக இருக்கும்.அதிலும் எனது நண்பன் பூபதிக்கு இந்தப்பாடல் என்றால் ஊயிர்.

//இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்! //

பெரும்பாலும் பெண்களைப்பார்க்கும் போது இந்த வரிகள் முணுமுனுப்பான்.

இதில் வரும் அனைத்துவரிகளும் என்னை மிகவும் கவர்ந்தவை.இரவில் பெரும்பாலும் இப்பாடலே ஓடிக்கொண்டிருக்கும்.இவ்வாரம் பெரும்பாலோனோர்க்கு இப்பாடலே பிடித்திருந்தது.

விழிகளின் அருகினில் வானம்...

படம் : அழகிய தீயே
பாடியவர் : ரமேஷ் விநாயகம்.
இசை : ரமேஷ் விநாயகம்

விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

பூ போன்ற கன்னி தேன்,
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்!
அது ஏன் என்று யோசித்தேன்!
அட நான் எங்கு சுவாசித்தேன்?
காதோடு மெளனங்கள்,
இசை வார்க்கின்ற நேரங்கள்,
பசி நீர் தூக்கம் இல்லாமல்,
உயிர் வாழ்கின்ற மாயங்கள்!
அலைகடலாய் இருந்த மனம்,
துளி துளியாய் சிதறியதே!
ஐம்புலனும், என் மனமும்,
எனக்கெதிராய் செயல்படுதே!
விழி காண முடியாத மாற்றம்!
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்!
ஒரு மெளன புயல் வீசுதே!
அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யா!

பூவில் என்ன புத்தம் புது வாசம்!
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்!
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்!
யாரோ என்று எந்தன் மனம் தேடும்!

கேட்காத ஓசைகள்,
இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்!
சொல் என்னும் ஓர் நெஞ்சம்!
இனி நில் என ஓர் நெஞ்சம்!
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்,
ஒரு போர்க்காலம் ஆரம்பம்!
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!

விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

என்னை எப்பொழுதும் தன்னிலை மறக்கச் செய்யும் பாடல் என்றால் இதுதான்.
ரமேஷ்விநாயகத்தின் மென்மையான குரல் பாடலை மேலும் அழகூட்டுகிறது.இப்பாடலைப்பாட ஒரு பிரபல பாடகர் வராத காரணத்தால் இப்பாடலை இவர் பாடநேர்ந்த்தாகக் கேள்விப்படுகிறேன்.ஆனாலும் சிறப்பாகப் பாடியிருக்கிறார்.இவரது இசையும் மிக ரம்மியம்.
அடுத்து வரிகள்..
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!

இப்பாடலை அனுப்பிய ரிஷான் அவர்களுக்கும் அதை வழங்கிய தல கான பிரபா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Visit the Site