நச்சுப் பொய்கை


அமரர் சுஜாதாவின்
விஞ்ஞானச் சிறுகதைகள் தொகுப்பை படிக்கும் போது அதில் எனக்குப் பிடித்த ஒரு சிறுகதை.

பாண்டவர்களுடைய பன்னிரண்டு வருஷ வனவாசம் முடியும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது.இன்னும் கொஞ்சநாள் இன்னும் கொஞ்சநாள் என்று மறைந்து மறைந்து,மருகி மருகி சீற்றமெல்லாம் நேரம்வரக் காத்திருக்க அந்தக் கடைசி நாட்களில் இது நிகழ்ந்தது.


காட்டில் வாழ்ந்த ஓர் பிராமணனின் அரளிக்கட்டையின் மேல் ஒரு மான் உடலைஉராயிந்து விட்டு செல்லும் போது அதன் சிக்கலான கொம்பில் கட்டை மாடிக்கொண்டுவிட்டது.மான் ஓடிப்போய்விட்டது.

வேறு வேலை இல்லாத பாண்டவர்கள் மான் துரத்தும் பயிற்சி இல்லாததால் அந்த மான் இவர்களுக்கு தண்ணி காட்டியது.மான் எதோ மாய மான் போலும்.துள்ளிக்குதித்து ஓடிய மான் அவர்களை காட்டில் வெகு தொலைவில் அழைத்துக்கொண்டு போய் விட்டது.மானும் மறைந்தது.மானைக்கானமல் அதிகதூரம் ஓடியதனால் இவர்கள் ஐவருக்கும் ஏகக்களைப்படந்தனர்.

ஒரே தாகம்.ஒரு மரத்தடியில் அமர்ந்தனர்.நாக்கு வறண்டு போனது.நகுலன் நொந்துகொண்டன்.ஒரு மானை பிடிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டோம் என்ன ஒரு தாழ்ச்சி என வருந்தினான்.அதற்கு பீமன் திரௌபதியை துகிலுரித்த நீசர்கள் கொல்லாமல் பார்த்ததை விட இது தாழ்ச்சியா என்று தன் மூச்சிரைப்புக்கு இடைய சொன்னான்.அதற்கு அற்சுனணன் அந்த தேரோட்டியின் மகன் சொன்னதை கேட்டு சும்மா நின்றோம்.அதை விடவா என்றான்.


எல்லாரும் களைப்பினால் பொறுமை தைரியம் எல்லாம் இளந்திருப்பதை உணர்ந்த தர்மர் பேச்சை மாற்றுவதற்கு நகுலனிடம் சும்மா பேசிக்கொண்டே இருக்காதீர்கள்.இப்போது நம் எல்லோர்க்கும் தாகம்.நாகுலனை நோக்கி மரத்தின் மேல்யேறி எங்காவது நீர் தெரிகிறதா பார் என்று ஆணையிட்டான்.
நகுலன் ;ஏன் இவன் ஏறமாட்டானா நாந்தான் கேடச்ச்சனா என மொனகியபடி ஏறினான் சற்று தூரத்தில் நீர் இருப்பதை கண்டான்.அண்ணா பக்கத்தில்லான் இருக்கிறது என்றான் சற்று உற்சாகத்தோடு.

உடனே போய் நீர் எடுத்து வா நகுலன் தன் தாக மிகுதியால் அங்கே விரைந்தான்.அங்கு ஒரு அழகான பொய்கை இருந்தது.தன் தாக்கத்தை தனித்த பிறகு அம்புத்தூணியிலும் நீர் நிறைத்துக்கொள்ளலாம் என எண்ணியபடி பொய்கையில் இறங்கினான்.நிர்மலமான நீரில் கைவைத்ததும் 'நில் !" என்று ஒரு அசரீரி கேட்டது.நகுலன் சுற்றுமுற்றும் நோக்கினான்.
சாகசம் செய்யாதே இந்தக்குலம் என்னுடையது.நான் சில கேள்விகள் கேப்பேன் பதிலளித்துவிட்டு தண்ணீரைக் குடி,அந்தக்குரல் ஆகாய்த்திளிருந்தா,மரத்திளிருந்தா,எங்கிருந்து வருகிறது ?
நகுலன் திடுக்கிட்டான்,இருந்தும் ஒரே தாகம்.தண்ணீர் குடித்துவிட்டு பிறகு பதில் சொல்லலாம் என்று இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி பருகினான் கரை ஏறியதும் மயங்கி கீழே விழுந்தான்.
தர்மனுக்கு சென்றவன் திரும்பவில்லை என்ற கவலை சகாதேவனை அனுப்பி பார்த்துவரச்சொன்னான்.
சகாதேவன் சென்று நகுலன் விழுந்து கிடப்பதைப்பார்த்து திடுக்கிட்டான்.திரும்பிச்செல்கையில் குளத்த பார்த்தன்.தண்ணீரின் கவர்ச்சி,தாகம் இரண்டும் சேர்ந்து நீரை பருகத்தோன்டச்செய்தது.குளத்தின் அருகில் சென்றான்.
மீண்டும் அசரீரி "சகதேவா இது என் பொய்கை.என் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு பிறகே தாகம் தீர்த்துக்கொள்ளலாம்.சகாதேவன் எச்சரிக்கையை புறக்கனித்தான்,நீரை பருகினான்,மயங்கி விழுந்தான்.

சாகதேவனும் திரும்பி வராது கண்டு கவலையடைந்த தர்மன் அருசுனணனை சென்று பார்த்துவச் சொன்னான்.அங்கு சென்று பார்க்கையில் இருவரும் மயங்கியநிலையில் இருந்தனர்.திடுக்கிட்டு பொய்கையை பார்த்தான்.அதை அணுகினான்.மீண்டும் அசரீரி முதலில் என்கேள்விகளுக்கு பதில்தா பின்பு நீரருந்தலாம்.இல்லையேல் உன் தம்பிகளுடன் நீயும் மடிவாய்"என்றது.அர்ச்சுனன் பதிலளிக்கும் முன் அவனை தாகம் ஆட்கொண்டது.நீரை பருகினான்,மயங்கி விழுந்தான்.

தர்மனுக்கு மூவரும் திரும்பி வராத கவலை,தாகம்.பின்பு பீமனை அனுப்பினான்.எல்லாமே நமக்கு விரோதமாக இருக்கிறது.ஜாக்கிரதை!.பீமன் விரைந்தான்.கிட்டத்தட்ட பீமனுக்கும் அதே கதிதான்.அவனும் மயங்கி விழுந்தான்.

நால்வரும் திரும்பி வராதது கண்டு கவலை கொண்டான் தர்மன்.பலவாரக சிந்தித்த படியாக குளத்தை அடைந்தான்.அங்கு நால்வரையும் கண்டான்.வனவாசம் முடியும் சமயத்தில் இப்படி ஒரு சோதனையா.யார் இப்படி செய்திருப்பார்கள்.அருகில் சென்று பார்த்தான்.உடலில் காயம் ஏதுமில்லை.உறங்குபவர்கள் போல் படுத்திருந்தனர்.ஒருவேளை இது துரியோதனன் சதியாக இருக்கும் என எண்ணியபடி பொய்கையை கண்டான்.தம்பிகளை பிறகு பார்க்கலாம்.முதலில் தாக்கத்தை தணிக்கலாம் என்று பொய்கையில் இறங்கினான்.அசரீரி என் பேச்சை கேளாமல் உன் தம்பிகள் தண்ணீர் பருகினார்கள்.நீயும் அப்படி செய்யாதே தர்மா.என்கேள்விகளுக்கு பதில் தந்துவிட்டு பிறகு குடி.இது என் குளம்"என்றது.

தர்மனும் தாகத்தை பொருட்படுத்தாமல் சரி கேள் என்றான்.
வரிசையாக கேள்விக்கணைகளை தொடுத்தது.

எது தினமும் சூரியனை உதிக்கச் செய்கிறது ?
பிரம்மம்.
மனிதனுக்கு எப்போதும் துணை எது ?
தைரியம்.
பூமியைக்காட்டிலும் கனமானது எது ?
மக்களை தாங்கும் தாய்.
ஆகாயத்தைக்காட்டிலும் உயர்ந்தது எது ?
தந்தை.
அறிவை காட்டிலும் வேகமானது எது ?
மனம்..............
இப்படியாக தொடர்ந்து அது கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தான்.

தர்மனே! நீ எல்லாம் அறிவாய் என்பது தெரிகிறது.உனக்கு எதிர்காலமும் தெரியுமோ ?

தெரியும்.என்றான் தருமன்

உன் பதில்கள் என்னை திருப்திபடுத்திவிட்டது .உன் சகோதரர்களில் ஒருவன் பிழைக்ககூடும்.நீ யாரை விரும்புகிறாயோ அவன் பிழைப்பான்!.என்றது அசரீரி.

தருமன் யோசித்தான்."அசரீரியே!,யாரும் பிழைக்க வேண்டாம்" என்றான்.

என்னது?" என்று திடுக்கிட்டது அந்தக் குரல்

அர்ப்பனே ! நான் எல்லாம் அறிவேன்.எதிர்கால விஞ்ஞானமும் ரசாயனமும் எனக்கு அத்துப்புடி.என் சகோதரர்கள் இறக்கவில்லை.மயக்கத்தில் இருக்கிறார்கள்.நான் சுனையில் இறங்கிய போதே தெரிந்து கொண்டேன்.சுனையருகில் மிக லேசாக கார்பன் மானாக்ஸைடு இருக்கிறது.மேலும் சுனை தண்ணீரில் லேசாக தாயோ மெண்ட்டோன் கலந்திருக்கிறது.இவை மிகக்குறைந்த அளவில் கலந்திருப்பதால் உயருக்கு ஆபத்தில்லை.கரைக்கு வந்து நல்ல காற்றை சுவாசித்தால் போதுமானது.தேவை என்றால் டெக்ஸ்ட்ரோஸ் அதிகப்படியாக உள்ள சில பழங்களை கொடுத்தால் குணமாகிவிடுவார்கள்.மரத்தில் ஒளிந்து கொண்டு வெவ்வேறு திசைகளில் குரல் கொடுக்கப் பழகிய அசரீரியே,உன் கேள்விகள் சுவாரஸ்யமாக இருந்தன.நன்றி"என்று சொல்லிவிட்டு தன் சகோதரர்களை பார்க்க சென்றான்.

-ராஜாஜியின் 'வியாசர்விருந்து'
புத்தகம் :விஞ்ஞானச் சிறுகதை

14 பின்னூட்டம்:

தியாகு said...

தருமர் ரொம்ப அறிவாளியா இருக்கார் எந்த கல்லூரியில் சேர்ந்து வேதியியல் துறை படித்தார் ?

May 10, 2008 at 3:59 PM  
வால்பையன் said...

என்ன ஒன்னோட நிறுத்தீடிங்க! சுஜாதாவோட சிறப்பே அவரோட நகைசுவை உணர்வு தான்! அதையும் எழுதுங்கள்

வால்பையன்

May 11, 2008 at 11:54 AM  
கார்த்திக் said...

தியாகு said...

//எந்த கல்லூரியில் சேர்ந்து வேதியியல் துறை படித்தார் ?//

இங்க ஈரோடுலதான் படிச்சாரு.

வால்பையன் said...

//என்ன ஒன்னோட நிறுத்தீடிங்க! சுஜாதாவோட சிறப்பே அவரோட நகைசுவை உணர்வு தான்! அதையும் எழுதுங்கள்//

எழுதிட்ட போச்சு.

May 14, 2008 at 12:24 PM  
madyy said...
This comment has been removed by a blog administrator.
May 17, 2008 at 12:25 PM  
ரூபஸ் said...

இன்று நிறைய ஆறுகள் இப்படித்தான் இருக்கின்றன..

காலத்திற்கேற்ற கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கார்த்திக்

May 17, 2008 at 3:30 PM  
madyy said...
This comment has been removed by a blog administrator.
May 18, 2008 at 12:49 PM  
கார்த்திக் said...

//ரூபஸ் said...

இன்று நிறைய ஆறுகள் இப்படித்தான் இருக்கின்றன..//

வருகைக்கு நன்றி ரூப்ஸ்.


//madyy said...

அது சரி.... இப்படிஉம் சிலர் .....//
தம்பி கொஞ்சம் அடங்கு ராசா

May 19, 2008 at 3:54 PM  
madyy said...
This comment has been removed by a blog administrator.
May 19, 2008 at 7:00 PM  
தமிழ்நெஞ்சம் said...

இந்த 'வியாசர் விருந்து' - புத்தகத்தை நான் 4ம் வகுப்பு படிக்கும்போது படித்தேன். பின்னர் மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டிருக்கிறேன்.

எனது தந்தையார் இறந்துபோன ஒரு வாரத்தில் மீண்டும் படித்தேன். அவரது அலமாரியிலிருந்தது இந்த நூல். அதை எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். செவிக்குணவான நூல் இது.

May 21, 2008 at 10:39 AM  
கார்த்திக் said...

வருகைக்கு நன்றி தமிழ்ணா

May 22, 2008 at 6:32 PM  
tamizh said...

nalla post!

May 26, 2008 at 10:21 AM  
கார்த்திக் said...

nandri tamil

May 26, 2008 at 3:43 PM  
Iniyal said...

Nijammave nalla kathai thaan karthick.

July 15, 2008 at 12:13 PM  
கார்த்திக் said...

நன்றிங்க இனியாழ்.

July 15, 2008 at 2:08 PM  
Visit the Site