இதுவரை இரு நாவல்களை மட்டுமே ஒரு நாளில் படித்துள்ளேன்.முதலாமாவது அமரர் சுஜாதா அவர்களின் கொலையுதிர்காலம்,சோளகர்தொட்டி.மூன்றாவதாக இந்த எரியும் பனிக்காடு.ஆங்கிலத்தில் Red Tea என்னும் பெயரில் திரு.பி.எச்.டேனியல் அவர்களால் 1969 ஆம் வருடம் எழுதப்பட்டது.இக்கதை 1920-30 இடைப்பட்ட காலங்களில் வால்ப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள (ஆனைமலை,டாப்சிலிப்,மூனாறு) பகுதிகளில் வெள்ளையர்கள் ஆட்சியில் நம்மவர்களுக்கு தேயிலைத்தோட்டங்களில் இருந்த நிலையை மிகத்துல்லியமாக ஆசிரியர் விளக்கியுள்ளார்.இந்நாவலை தமிழில் இரா.முருகவேள் மொழிபெயர்த்துள்ளார்.


ஆனைமலைக் காடுகளில் தழைத்திருக்கும்
ஆங்கிலேயர்களின் தேயிலைத் தொட்டாங்களில்
அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்
நீங்கள் கதகதப்பாய் உறுஞ்சிக் குடிக்கும்
ஒவ்வொரு துளி தேனீரிலும்
கலந்திருக்கிறது எமது உதிரம்
-ஆதவன் தீட்சண்யா

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மயிலம்பாடி எனும் கிராமத்தில் வாழும் கருப்பன் மற்றும் குடும்பத்தார் வாழ்கின்றனர்.முப்பதுக்கும் மேற்ப்பட்ட வீடுகளை கொண்ட அக்கிராமத்தில் மிக மோசமான பஞ்சம் ஏற்ப்படுகிறது.ஊரில் ஏதும் வேலை இல்லாததனால் அருகில் உள்ள நகரமான கயத்தாருக்கு சென்று வேலை தேடுகிறார்.ஒருவேலையும் கிடைக்காத சலிப்பில் சங்கரபாண்டி என்பவரது அறிமுகம் கிடைக்கிறது.அவர் தான் மலையில் உள்ள எஸ்டேட்டில் மேஸ்திரியாக இருப்பதாகவும்.அங்கு வந்தால் நிறையா சம்பாதிக்கலாம் என்றும் சொல்கிறார்.தானும் முதலில் கூலிக்கு சென்று நாலைடிவில் மேஸ்திரியானதாகவும் அங்கு வேலைக்கு வந்தால் கருப்பனும் தன் மனைவியுடன் அங்கு வந்தால் அதுபோல சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார்.கருப்பனை தனது ஏஜென்டிடம் அழைத்து சென்று கருப்பனுக்கும் அவர் மனைவுக்கும் சேர்த்து 40 ருபாய் முன்பணம் வாங்கிக்கொடுத்து வீட்டிருக்கு சென்று அவர்களிடமும் கலந்தாலோசித்து வந்து பதில் கூறுமாறு சொல்கிறார்.

கருப்பனும் தனது குடும்பமும் சாப்பிட்டு சில தினங்கலானதால் இன்றிரவாவது அம்மைக்கும் மனைவிக்கும் சாப்பிட வாங்கிக்கொண்டு வீட்டுக்கு செல்கிறார்.முதலில் அம்மாவும் மனைவியும் மறுக்கின்றனர்.மாலை நேரத்தில் ஒரு கோடங்கி அவர்கள் வீட்டருகில் வந்து நல்ல சகுனமாக சொல்லவும் அனைவரும் திருப்த்தி அடைகின்றனர்.அந்தக் கோடங்கி சங்கரபாண்டியிடம் சென்று பணம் பெறுகிறார்.வள்ளிக்கு விருப்பமில்லை.இருந்தாலும் வறுமை காரணமாக ஒத்துக்கொள்கிறார்.

எவ்வளவு அழகான முகமுடி பூண்டிருக்கிறது
இந்த
நகரம்....
.
மர்சென்ட் ஆப் வெனிஸ்
-ஷேக்ஸ்பியர்
(இப்படி சிறு வரிகள் மூலமாக இந்த அத்யாயத்தில் நடக்கப்போவதை ஆசிரியர் நமக்கு உணர்த்துகிறார்)

இவர்களைப்போல் ஒரு குழுக்களையே திரட்டிக்கொண்டு இரண்டு நாள் பயனத்திருக்கு பின் பொள்ளாச்சி வழியாக வால்ப்பாறை வந்து சேருகின்றனர்.எஸ்டேட்க்கு வந்த பின்புதான் அவர்களுக்கு புரிகிறது.இங்கு வாழ்வது எளிதானதல்ல என்று.திரும்பியும் போக முடியாது அப்படிப்போவதானால் சங்கரபாண்டியிடம் பெற்ற முன்பணம் பயணச்செலவு பணம் மொத்தம் அறுபதும் கொடுத்துவிட்டுத்தான் செல்லவேண்டும்.அதனால் ஓராண்டு அங்கேயே வேலை பார்க்க வேண்டும்.இப்படி வந்தவர்களையெல்லாம் ஒரு லைன்னில் தங்க வைக்கப்படுகிறார்கள்.வாழவே தகுதி இல்லாத ஒரு இடத்தில் அவர்கள் அமர்த்தப்படுகிறார்கள்.பெண் பித்து பிடித்தலையும் வெள்ளையர்களின் ஆசைக்கு இணைக மறுப்பதால் வள்ளி படும் துயரங்கள் ஏராளம்.அவளது கூலி பணம் முதல் கொண்டு ஏமாற்றப்படுகிறது,

செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் மழை பொழிய ஆரம்பித்துவிடும் ஒரு மாதமானாலும் கூட மழை நிற்காமல் பெய்கிறது.அதன் கூடவே ரத்தை உருஞ்சும் அட்டைப்புளுக்களும் வரும்.எவ்வளவு மழை பெய்தாலும் குளிரடித்தாலும் புழுக்கள் கடித்தாலும் அவர்கள் வேலை வாங்கப்படுவர்.மழைக்கு பிறகு சற்றே இடைவெளி விட்டு ஒரு வகையான காய்ச்சல் பரவும் போதுமான மருத்துவ வசதி இல்லாததனால்.
வருடத்திற்கு பாதிபேர் இறக்க நேரிடுகிறது.இதற்க்கு பயந்து தப்பி செல்பாவர்களும் பாதிவழியிலேயே இறந்துவிடுவர்.இந்த சமயத்தில் கூட இவ்விரக்கம் மில்லாமல் கூலிகள் வேலை வாங்கப்படுவர்.

இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில் தாமஸ் எனும் மருத்துவர் அங்கு பணியில் அமர்த்தப்படுகிறார்.அவர் படித்த மருத்துவர்.வெல்லையனைக்கண்டால் சூக்களை கலட்டி விட்டு தொப்பியை எடுத்துவிட்டு சலாம் துறை அவர்களே என்று சொல்லவேண்டும்.ஆனால் இவர் மட்டும் அப்படி செய்யவில்லை.மாறாக வெல்லையனைப்பார்த்து Good Morning Sir என்று கூறுவர்.இதை அவர்களால் ஜீரணிக்க முடியாது.இருந்தாலும் வேறு மர்த்துவர் இல்லாததால் அடங்கிப்போவர்

தாமஸ் அங்கு வேலையில் சேரும் நேரத்தில்.ஏற்க்கனவே மூன்று முறை கரு கலைந்திருந்த வள்ளி இப்போது மறுபடியும் கருவுற்றிரிப்பால்.அந்த சமயத்தில் காயிச்சலும் வேறு தாக்கியிருக்கும் இந்த மோசமான நிலையிலும் வள்ளி வேலைக்கு அனுப்பப்பட்டதால் நோயின் சீற்றம் மேலும் அதிகமாகிருக்கும்.நோய் குணமாக முன்பணமாக பத்து ருபாய் பெற்று மந்திரவாதியிடம் தாயத்து வாங்கி கட்டி மேலும் கடனாளி ஆகிருப்பன் கருப்பன்.இரண்டாண்டு அடிமை வாசத்திருக்கு பின்னர் அந்நோயிலிருந்து மீண்டு வள்ளியும் கருப்பனும் ஊர் வந்து சேர்ந்தார்களா என்பதே முடிவு.

அங்கிருக்கும் எழுத்தர்கள் பேசிக்கொள்வது போல பல தகவல்களை ஆசிரியர் நமக்குத்தருகிறார்.அப்பாவும் தாமசும் பேசும் போது அப்பாவு:இங்கிருக்கும் ஒவ்வொரு தேயிலை செடியிலும் மூன்று கூலிகளின் உயிர் அடங்கிருக்கிறது என்பார்.லண்டனிலிருந்த வெள்ளையர்கள் பணம் சம்பாதிக்க இங்க படிப்பறிவில்லாத ஏழைக் கூலிகளின் உயிர் விலையாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

புத்தகம்:எரியும் பனிக்காடு (Red Tea)
வெளியீடு :விடியல் பதிப்பகம்
விலை :150.

இந்த மாத புகைப்பட போட்டிக்கான எனது படம்.




Visit the Site