Talk To Her (டாக் டு ஹெர்)

இதுவும் செழியன் அவர்களின் உலக சினிமாவில் வாசித்த ஸ்பெனிஷ் மொழிப்படம் வெகுநாட்களுக்கு பிறகு காணக்கிடைத்தது



ஒரு வயதான பெண் மற்றும் ஒரு இளம் பெண் இருவறும் சோகமாக நடனமாட மேடையில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நாற்காலிகளை அவர்கள் நடனமாடுவதர்க்கேர்ப்ப ஒருவர் ஒழுங்கு படுத்துவார்.அந்நாடகத்தை பார்வையிடும் பார்வையாளர்களில் ஒருவர்(மார்கோ) அழுதபடியே பார்த்துக்கொண்டிருப்பார்.அவரையும் நாடகத்தையும் ஒருசேர பார்த்துக்கொண்டிருப்பார் பெனிங்னியோ மார்டின்.அங்கே மார்கோவிடம் பேசலாம் என்றெண்ணி பேசாமல் திரும்பிவிடுவார்.

லிடியா எனும் காளை சண்டையில் கலந்துகொள்ளும் பெண் ஒருவரின் அறிமுகம் கிடைக்கிறது மார்கோவிற்கு.இருவரும் ஒருமுறை வெளியில் செல்லும் போது லிடியா மார்கோவிடம் பேச வேண்டும் என்று கூறுவர் ஒரு காளை அடக்கும் போட்டியில் பங்கு பெரும் லிடியா மாடு மோதியதால் மருத்துவமனையில் கோமா நிலையில் சேர்க்கப்படுகிறார்.



பெனிங்னியோ மார்ட்டின் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிவார்.அங்கே பல ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கும் தனது நோயாளியான அலிசியாவிடம் தான் பார்த்த நாடகத்தை விவரித்து சொல்லுவார்.அப்படியே தன்னருகில் இருந்த மார்கோ அழுத்தத்தை பற்றியும் தான் மார்கோவிடம் பேச விரும்பியதையும் கூறுவர்.

அலிசியா இருக்கும் அதே மருத்துவ மனையில் லிடியாவும் சேர்க்கப்படுகிறார்.அங்கே பெனிங்னியோவையும் அலிசியாவையும் மார்கோ சந்திக்கிறார்.மார்கோவுக்கும் பெனிங்னியோவுக்கும் நட்பு ஏற்ப்படுகிறது.ஒருமுறை அலிசியாவுடன் பெனிங்னியோ பேசிக்கொண்டிருப்பதை மார்கோ பார்ப்பார்.அதற்கு பெனிங்னியோ கோமாநிலையில் இருந்தாலும் அவர்களுக்கும் எல்லா உணர்வுகளும் இருக்கும் என்பதோடு மார்கோவையும் லிடியாவுடன் பேசச்சொல்லுவார்

ஒருமுறை அலிசியாவிற்ககு பெனிங்னியோ பணிவிடை செய்யும் போது அலிசியாவின் தந்தை உள்ளே வருவார்.தன் பெண்ணிருக்கு ஒரு வாலிபன் சிகிட்சை அளிப்பதை அவர் விருப்பமில்லாத அவரிடம் சில பொய்களை சொல்லுவார் பெனிங்னியோ.



படத்தின் ஆரம்பத்தில் நடனம் ஆடிய அந்த வயதான பெண்மணி அவ்வப்போது வந்து அலிசியாவை பார்த்துவிட்டு செல்லுவார்.அப்போது மார்கோ பெனிங்னியோவிடம் அவரைப்பற்றி கேட்பார். நான்காண்டுகளுக்கு முன் நடந்த வற்றை விவரிப்பார். பெனிங்னியோவின் வீட்டின் எதிரில் இருக்கும் நடனப்பள்ளியில் நடனம் பயிலுவார் அலிசியா தினமும் அவரை தன் வீட்டு ஜென்னல் வழியே தினமும் பார்த்துக்கொண்டிருப்பார்.ஒருநாள் அவர் தவறவிடும் பர்சை எடுத்துக்கொடுப்பார் அலிசியாவிடம்.அதுவரை பெனிங்னியோ யார் என்பதே அலிசியாவுக்கு தெரியாது.அப்போது ஓரிரு வார்த்தைகள் அலிசியாவிடம் பேசுவார்.தனக்கு உலகம் சுற்றுவதிலும் சைலன்ட் மூவி பார்ப்பது பிடிக்கும் என்கிறார் .அல்சியாவை காண்பதற்காக வீட்டிலேயே கிளினிக் வைத்திருக்கும் அலிசியாவின் சைகாலஜிஸ்ட் தந்தையிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி அவரை சந்தித்துவிட்டு அலிசியாவின் அறைக்குள் நுழைகிறான். அவன் வெளியே வரும்போது அவரை அங்கு காணும் அலிசியா அதிர்ச்சியடைகிறார்.அலிசியாவின் கிளிப்பை அங்கிருந்து எடுத்து வந்த விடுவார்,அடுத்தநாள் அலிசியா பள்ளிக்கு வருவார் என்று தன் வீட்டு ஜன்னலருகில் காத்திருப்பார்.மருத்துவமனைக்கு வரும் பெனிங்னியோ விபத்தில் சிக்கி கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பார் அலிசியா.அன்றிலிருந்து நான்காண்டுகளாக ஒருதலையாக அலிசியாவை காதலித்து வருவார் பெனிங்னியோ.அலிசியாவிருக்கு பிடித்த உலக நாடுகள் பற்றிய செய்திகளையும்,சைலன்ட் மூவி படங்களையும் பார்த்துவந்து கதை சொல்லிக்கொண்டிருப்பார் பெனிங்னியோ.



பெனிங்னியோ சொன்னபாடி மார்கோவும் லிடியாவிடம் பேசிவருகிறார்.ஒருநாள் அங்குவரும் லிடியாவின் பழைய காதலன் மார்கோவிடம் அவரும் லிடியாவும் கல்யாணம் செய்வது பற்றி முடிவெடுத்ததைப்பற்றி கூறுகிறார்.அப்போதுதான் லிடியா தன்னிடம் இதைப்பற்றி பேசமுயன்றிருகிறார் என்பதை புரிந்து கொள்கிறார் அங்கிருந்து விலகுகிறார்.

ஒருநாள் வழக்கம் போல சிகிட்சை அளிக்க வருகிறார் பெனிங்னியோ.அன்று தான் பார்த்த சைலன்ட் மூவியின் கதையை பேசியபடி தனது பணியை தொடர முயலுகிறார்.
அந்த படத்தில் வரும் சில போர்னோ காட்சிகளை சொல்லியபடி.தனது மனநிலை இன்று சரிஇல்லை என்றும் கூறுவர்.

கோமாவில் இருக்கும் அலிசியாவை தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக மார்கோவிடம் சொல்லுகிறார் பெனிங்னியோ.தனது காதலியை பழைய காதலனுடன் விட்டுவிட்டு வருத்தத்துடன் வெளியேறும் மார்கோவிருக்கு பெனிங்னியோவின் பேச்சு கோவத்தை தூண்டுகிறது.இனிமேல் இவ்வாறு பேசவேண்டாம் என்று எச்சரிப்பதோடு மார்கோவும் விட்டுவிட்டு வந்த தனது உலகம் சுற்றும் பத்திரிகை பணியை தொடர சென்று விடுகிறார்.

கோமாவில் இருக்கும் அலிசியாவின் உடம்பில் ஏற்ப்பட்ட மாற்றத்தைப்பற்றி பெனிங்னியோவும் அவரது சக பெண் பணியாளரும் மேளிடத்திருக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.அலிசியா கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது.யார் காரணம் என்று விவாதிக்கும் போது பெனிங்னியோவுக்கும் மார்கோவுக்கும் நடந்த விவாதத்தை தெரிவிக்கிறார் பெனிங்னியோவுடன் பணிபுரிபவர்.அலிசியா வேறு மருத்துவமனைக்கும் பெனிங்னியோ சிறைச்சாலைக்கும் அனுப்பப்படுகிறார்.

வெளிநாட்டில் இருக்கும் மார்கோ பத்திரிகையில் லிடியா இறந்த செய்தியை அறிகிறார்.மருத்துவமனிக்கு தொடர்புகொள்கிறார் அப்போது பெனிங்னியோ சிறையில் இருப்பது அவராது சக பெண் ஊழியர் மூலமாக தெரிந்துகொள்கிறார்.யாருமற்ற அந்த நண்பனை காப்பாற்றுமாறு வேண்டுகிறாள்.(இவறும் ஒருதலையாக பெனிங்னியோ வாய் காதலித்திருப்பார் போலும்)

ஸ்பெயின் திரும்பிய மார்கோ சிறையில் இருக்கும் பெனிங்னியோவை சந்திக்கிறார். பெனிங்னியோ தன் காதலி பற்றி அறிந்து வரும் படியும் அலிசியாவிருக்காக தான் தயார் செய்த தன்வீட்டில் தாங்கிக்கொள்ளும் படியும் வேண்டுகிறார்.அங்கு தங்கும் மார்கோ எதிரில் நடனப்பள்ளியில் அலிசியா அமர்ந்திருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சி அடைகிறார்.
.பெனிங்னியோவின் வக்கிலிடம் இதுபற்றி கேட்கிறார்.அவரும் அலிசியாவிருக்கு குழந்தை இறந்து பிறந்ததென்றும் அதனால் அவர் சுய நினைவுக்கு வந்ததையும் கூறுகிறார்.ஆனால் பெனிங்னியோவிடம் அலிசியா இறந்து விட்டதாக சொல்லப்போவதாக கூறுகிறார்.சரியென்று வீடு திரும்புகிறார் மார்கோ.மறுநாள் காலை தனது செல்லுக்கு வரும் தகவலை பார்த்து ஜெயிலுக்கு ஓடுகிறார் மார்கோ.தன் காதலி இல்லாத உலகத்தில் தனுக்கும் வாழ விருப்பமில்லை எனக்கூறி ஒரு கடிதம் எழுதி விட்டு தூக்கமாத்திரைகளை உண்டு இறந்து விடுகிறார் பெனிங்னியோ.அலிசியாவின் நினைவாக வைத்திருந்த கிளிப்பை பெனிங்னியோவின் கல்லறையில் வைத்து அஞ்சலி செலுத்துவார் மார்கோ.



ஒருநாள் நாடக நிகழ்ச்சிக்கு செல்லும் மார்கோ வழக்கம் அழுதுகொண்டு நாடகம் பார்க்கிறார் அதை பின்னாலிருந்து கொண்டு ஒரு பெண் பார்த்துக்கொண்டிருப்பார்.இடைவேளையின் போது.தன்னை பார்த்துக்கொண்டிரும் அந்தப்பெண்ணை திரும்பிப்பார்க்கிறார் மார்கோ.அதிர்ச்சி அடைகிறார்.தன்னை பார்த்துக்கொண்டிருந்தது அலிசியாவும் அவரது ஆசிரியையும் என்பதை அறிகிறார்.இடைவேளையில் மார்கோவை யாரென்று அறியாத அலிசியா நலமா என்று கேட்கிறார்.இதை பார்த்து அதிர்ச்சி அடையும் ஆசிரியையிடம் பெனிங்னியோ இறந்ததை தெரிவிக்கிறார் மார்கோ.இடைவேளைக்கு பின் நாடகம் தொடர அவ்வப்போது திரும்பி அலிசியாவை பார்த்தபடி இருக்கிறார் மார்கோ.பெரும் ஒளி அலிசியாவின் மீது படர படம் நிறைவடைகிறது.

2002 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்கியவர் பெத்ரோஅல்மதோவர்.இவரைப்பற்றி அறிய எஸ்.ரா அவர்களின் இந்த வலைப்பதிவை பார்க்கவும்.

8 பின்னூட்டம்:

M.Rishan Shareef said...

உலகசினிமாக்களைப் பார்த்து அருமையாக எழுதிவருகிறீர்கள் கார்த்திக். தரமான படங்களென இப்படங்களின் தலைப்பை மட்டுமே கேட்டுவந்த எனக்குக் கதை விபரிக்கப்பட்டுள்ளவிதமும் கதையும் பிடித்திருக்கிறது. ஆங்காங்கே காணப்படும் சின்னச் சின்ன எழுத்துப்பிழைகளைத் தவிர்த்திருக்கலாம். தொடர்ந்தும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் நண்பா !

August 20, 2008 at 11:43 PM  
'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

இந்த படத்தின் திரைக்கதை விமர்சனத்தை ஒருமுறை விகடனில் படித்ததாக நியாபகம்!

நன்றாக எழுதியிருக்கின்றீகள்!

August 26, 2008 at 5:41 AM  
தியாகு said...

ஒன்றுமே விளங்கவில்லை தம்பி .

August 27, 2008 at 3:43 PM  
வால்பையன் said...

//ஒன்றுமே விளங்கவில்லை தம்பி .//

எதுக்கும் மப்பு தெளிஞ்ச பிறகு ஒருக்கா படிச்சு பாரு

August 27, 2008 at 7:22 PM  
லேகா said...

Nice narration karthick!!Interesting too..

August 27, 2008 at 8:11 PM  
KARTHIK said...

// எம்.ரிஷான் ஷெரீப் said...

ஆங்காங்கே காணப்படும் சின்னச் சின்ன எழுத்துப்பிழைகளைத் தவிர்த்திருக்கலாம். தொடர்ந்தும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் நண்பா //

இனிமேல் அப்படிவராமல் பார்த்துக்கொள்கிறேன் ரிஷான்.

// sathish said...

இந்த படத்தின் திரைக்கதை விமர்சனத்தை ஒருமுறை விகடனில் படித்ததாக நியாபகம்!

நன்றாக எழுதியிருக்கின்றீகள்!//

நன்றி சதீஷ்
வேரெதுல எல்லாம் ஆனந்த விகடன்ல தான் படிச்சிருப்பிங்க
வாங்கிப்பாருங்க.

//தியாகு said...

ஒன்றுமே விளங்கவில்லை தம்பி .//

டேய் எதுக்கும் பாஸ் சொன்னமாதிரி செஞ்சு பாரு விளங்கீரும்.

// வால்பையன் said...

//ஒன்றுமே விளங்கவில்லை தம்பி .//
எதுக்கும் மப்பு தெளிஞ்ச பிறகு ஒருக்கா படிச்சு பாரு.//

நல்லா விளங்கரமாதிரி சொல்லீருக்கீங்க.

//லேகா said...

Nice narration karthick!!Interesting too..//

நல்ல படம் நேரம் இருந்த வாங்கிப்பாருங்க லேகா.

August 29, 2008 at 5:13 PM  
Athisha said...

இன்றுதான் இப்படத்தை வாங்கி வந்திருக்கிறேன்.

நாளை பார்த்துவிட்டு உங்கள் பதிவை படிக்கிறேன் நண்பா..

November 29, 2008 at 8:58 PM  
KARTHIK said...

நல்ல படம் பாருங்க அதிசா

December 1, 2008 at 12:04 PM  
Visit the Site