பல பேர்த்தோட ரிங் டோனா இந்தப்பாட்டு இருந்தது அவனுகள்ட்ட இரு வரிகள் மட்டும் தான் இருந்தது.இன்று தான் அக்கரை சிங்கம் விவசாயி இளா அவரு பதிவுல இருந்து இந்தப்பாட்ட சுட்டேன்.நன்றி இளா.



என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும்முன் செய்தி அனுப்பு…ஓஹ்
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதல் அதைச் சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு..

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்..
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன்..
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்..
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்..
(என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு......)

யாரோ? உன் காதலில் வாழ்வது யாரோ?
உன் கனவினில் நிறைவது யாரோ?
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ?
ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ?
ஒரு பகல் என்னை சுடுவது ஏனோ?
என் தனிமையின் அவஸ்த்தைகள் தீராதோ?

காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா?
இலையை போல் என் இதயம் தவறி விழுதே!
(என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு......)

பாடலை டவுன் லோட் செய்ய

15 பின்னூட்டம்:

வால்பையன் said...

இப்போ காதலிக்கும் போது நல்லா தான் இருக்கும், அப்புறம் பூரிகட்டையில அடி வாங்கும் போது தான் தெரியும்

November 20, 2008 at 7:31 PM  
காண்டீபன் said...

//இப்போ காதலிக்கும் போது நல்லா தான் இருக்கும், அப்புறம் பூரிகட்டையில அடி வாங்கும் போது தான் தெரியும்//

:)))))


நல்ல பாட்டு... பகிர்ந்தமைக்கு நன்றி.

November 20, 2008 at 7:57 PM  
Kumky said...

எப்பிடியோ சுட்டோ சுடாமயோ அப்பப்போ ஒரு பதிவ போட்டு விடுங்க..
என்னைய மாரி கும்முவானா இருங்துடாதீங்க...

November 21, 2008 at 4:19 PM  
வெண்பூ said...

நன்றி கார்த்தி.. சீரியல்களில் பாடல்கள் மட்டும் பார்க்கும் எனக்கு (& என் போன்ற பலருக்கும்) பிடித்த பாடல் இது. பகிர்ந்ததற்கு நன்றி..

November 22, 2008 at 9:54 PM  
தமிழ் தோழி said...

எனக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். நன்றி பாடல் வரிகள் போட்டதுக்கு.
முடிந்தால் என்னுடைய வலைக்கு வாங்க.

November 23, 2008 at 6:50 PM  
Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பேசும் போது எவ்வளவு பேசறிங்க? ஏன் அதெல்லாம் எழுத மாட்டேன்கறிங்க? நான் பார்த்து வியந்த மிகச் சிலரில் நீங்களும் ஒருவர். பாட்டு, வீடியோ எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஏதாவது செய்தி, கருத்து அல்லது ஏதாவது ஒண்ணுன்னு எழுதுங்க ப்ளீஸ்.

November 25, 2008 at 7:20 PM  
KARTHIK said...

@வால்பையன்
வால் அனுபவம் பேசுகிரதுன்னு ஒரு பதிவு போடுங்கலேன்.

@காண்டீபன்
நன்றி காண்டீபன்.ரோம்ப சிரிக்காதிங்க அவர் சொல்லுரது உங்கலுக்கும் சேர்த்துத்தான்.

@கும்க்கி
தல எதையாவது செய்து நானும் ரவுடிதான் காட்டிக்கவேண்டியிருக்கு.

@ thevanmayam

சரிங்க வந்திடுவோம்.

@வெண்பூ

உங்கள் நன்றி மற்றும் எனதும் இரண்டும் சேர்த்து இளாவுக்கு அனுப்பிடுவோம்.


@தமிழ் தோழி

நன்றி தோழி.


Maximum India said...
ஆஹா பிரபுணா இப்படி தப்புக்கணக்கு போட்டுட்டீங்கலே.

பாருங்க இங்க இருக்க கும்க்கி அவரும் ஒரு வங்கி அதிகாரி தான்
பத்தாததுக்கு தஎமு சங்க தலைவரும் கூட ஒன்னும் சொல்லாம கம்முனு இருக்காரு

வெண்பூ உங்க ஊருக்காரருதான்.
இப்போ சென்னைல இருக்காரு.

இந்த தகவல் போதுமுன்னு நெனைக்குறேன் :-))

December 1, 2008 at 11:16 AM  
Karthik said...

Inda serial ippa enna aache nu therila nalla veala inda paatha pothu nyabagam padhuthuneenga.. Ungaluku edeenum idea iruka inda serial pathi???

December 1, 2008 at 3:52 PM  
Silly Village Girl said...

Thanks for sharing the lyrics. I like this song very much

December 2, 2008 at 2:37 PM  
KARTHIK said...

நன்றி கார்த்தி,சில்லி வில்லேஜ் கேள்

(என்னங்க பேரு இது வித்தியாசமாத்தான் இருக்கு :-)) )

December 3, 2008 at 3:22 PM  
Arasi Raj said...

karthick mama, nanum ammavum serial ellam parkka mattom..amma irukkura oorla intha mathiri nalla channel ellam theriyathu....naan ammavai ring tone download panna sollirukken....hmm....eppo seyyurangannu parppom

December 5, 2008 at 7:53 AM  
ரமேஷ் வைத்யா said...

ஐயா கார்த்திக், என் அன்பே,
எப்படி முடுக்கிலிருக்கும் என் ப்ளாகுக்கு வந்தாய்? அதுவும் அடியாளின் கதை வரை படித்து கரன்ட்டிலிருக்கிறாய்...
இந்தப் பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிக்கும். ரொம்ப ரொம்ப நன்னி.

December 6, 2008 at 11:16 AM  
KARTHIK said...

@நிலா
// nanum ammavum serial ellam parkka mattom..amma irukkura oorla intha mathiri nalla channel ellam theriyathu...//

நானும் சீரியல் பாக்குரதில்லை இந்தப்பாட்டு மட்டும் பிடிக்கும்.தெரியாம இருக்குர வரைக்கும் நல்லதுதான்.
இப்பவவே சீரியல் பாக்க ஆரம்பிச்சா :-))
நன்றி நிலா குட்டி.

// கிழஞ்செழியன்

ஐயா கார்த்திக், என் அன்பே,
எப்படி முடுக்கிலிருக்கும் என் ப்ளாகுக்கு வந்தாய்? //

தல நீங்க எத்தன வலை அழிச்சு அழிச்சு புதுசு புதுசா உருவாக்கினாலும் அத்துனையிலும் வருவேன்.
உங்கள் அன்புக்கு நன்னி நன்னி நன்னி.

December 6, 2008 at 12:02 PM  
ரமேஷ் வைத்யா said...

//தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி கொடுங்
கூற்றுக்கிரை எனப் பின்மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே நானும்
வீழ்வேன் என்று நினைத்தாயோ//

மிஸ்டர் கார்,
முகப்பிலிருக்கும் பாடலை மேற்கண்டபடி, நேரமிருக்கும்போது, மாற்றவும். நன்றி.

December 6, 2008 at 2:14 PM  
KARTHIK said...

//மிஸ்டர் கார்,
முகப்பிலிருக்கும் பாடலை மேற்கண்டபடி, நேரமிருக்கும்போது, மாற்றவும். நன்றி.//

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி தல
மாத்தியாச்சுங்க.

December 6, 2008 at 3:52 PM  
Visit the Site