சசி வாரியார் எனும் மலையாள எழுத்தர் பிரிதா என்ற தோழியின் உதவியோடு தமிழரான ஜனார்த்தனன் பிள்ளை எனும் தூகிலிடுபவரின் சுயசரிதையை முதலில் அவரது வாய் வழியாகவும் பின் அவராலேயே எழுதப்பெற்றும் ஆங்கிலத்தில் வெளியான நூல் Hangman's Journal.இதை இரா.முருகவேள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.ஏற்கனவே இவரது பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்,எரியும் பனிக்காடு போன்ற இவரது இரு மொழிபெயர்ப்பு நாவல்கள் வாசித்துள்ளதால் இந்நாவலையும் வாசிக்கும் ஆவலை மேலும் தூண்டியது.
இறப்பு என்பது எப்படி இருக்கும்.இறப்பை பற்றி சில பல கதைகள் இருந்தாலும் அது எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.முப்பதாண்டுகாலம் தூக்கிலிடுபவராக திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும்,விடுதலைக்குக்கு பிந்தைய இந்தியாவிலும் ஆரட்சர்ராக பணியாற்றியவர்.மொத்தம் 117 பேரை துக்கிலேற்றியிருக்கிறார்.அவரது அனுபவத்தை சசி வாரியார் புத்தகமாக கொண்டுவந்திருக்கிறார்(ஏனோ தமிழில் அது பற்றி யாரும் சிந்திக்கவில்லை).

தூக்கு தண்டனை அனுபவிப்பவரை விட அதை நிறைவேற்றுபவரின் மனத்துயரத்தையும் அவர்கள் அனுபவித்த குற்றவுணர்ச்சியையும்,சமூகத்தில் மற்றும் சக பணியாளர்களுடன் அவர்கள் நடத்தப்பட்ட விதம் பற்றியும் ஜனார்த்தனம் பிள்ளை நம்மிடையே பகிர்கிறார்.அவர் தான் முடித்த வேலைகளெல்லாம் மன்னரின் பெயரால் நிறைவேற்றப்பட்டது மன்னரோ கடவுளின் பெயரால் ஆணையிடுகிறார்.எனவே கடவுளின் பெயராலையே தான் இவ்வேலையை செய்வதாக அவர் தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டிருந்திருக்கிறார்.

அவரது தந்தைக்கு பின் அவர் இந்த வேலையை ஏற்று செய்திருக்கிறார்.தனது குடும்பத்திருக்காக அவர் இந்த வேலைக்கு போயிருக்கிறார்.நாட்டில் பஞ்சம் பசி எது நேர்ந்த போதிலும் இவருக்குண்டான சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது.தூக்கிலிடப்படும் நபர் முடிந்தளவு நீண்ட நேரம் துள்ளாமலும் கழுத்தெலும்பு முறியாமலும் சிரமமின்றி அனுப்பிவைப்பதை தனது கடமையாக கொண்டிருந்திருக்கிறார்.பணி ஓய்வுக்கு பிந்தைய நாட்களில் குற்றவுனர்ச்சியால் பாதிக்கப்பட்ட சமயங்களில் அவரது மாஷ் (ஆசிரியர்) உடனான உரையாடல் அவருக்கு சிறிது மன நிம்மதியை கொடுத்திருக்கிறது.அது பற்றியும் அவர் நினைவு கூர்கிறார்.

அவரது குறிப்புகளில் சில

மரணதண்டனை அளிக்கப்பட்ட நபர் அதிகாலை அழைத்துவரப்படுகிறார்.முந்தைய இரவு அவர் விரும்பும் உணவு அவருக்கு அளிக்கப்படுகிறது கடைசி இரவு தான் விரும்பிய உணவை அவர் சாப்பிடலாம் சூப்ரன்ட்டேன்டின் உணவையே தண்டனை அளிக்கப்பட உள்ளவருக்கும் வழங்கும் மரபு உள்ளது.அப்போதைய சூப்பிரண்டெண்டின் நேர்மை மிகுந்த ராகவன் நாயர் ஒரு நாள் தூக்குக் கைதியிடம் 'இறுதி உணவாக என்ன சாப்பிடுகிறாய்' என்று கேட்டதிலிருந்து இந்த மரபு தோன்றியது கைதி "இரவு எஜமான் என்ன சாப்பிடுறீங்களோ அதையே நானும் சாப்பிட விரும்புகிறேன்.

கைதியின் விருப்பத்தை உணர்ந்து கொண்ட ராகவன் நாயர் வீடுக்கு சென்று மனைவியிடம் வழக்கத்தைவிட நன்றாக ஒரு விருந்தாளிக்கு சமைப்பது போல் சமைத்து அதில் ஒரு பகுதியை சிறைக்கு அனுப்பி வைக்கும்படி சொன்னார்.இந்த வழக்கம் பின்னாளில் ஒட்டிக்கொண்டது.பின்பு தனது சொந்த மேசையிலிருந்து ஒரு வேலை உணவு அளிப்பதற்கு சிறை அதிகாரிக்கு ஒரு சிறிய தொகை வெகுமதியாக அளிக்கும் அளவிற்க்கு சென்றது.

அடுத்த முறை தூக்குமேடை பகுதியில் நுழையும் போது முதலில் என் கண்களில் படுவது பழைய அழுக்கேறிய மரப்பலகைகளான பொறிக்கதவின் மையத்திலுள்ள இருண்ட இடமாகத்தானிருக்கும்.ஆயிரம் ஜோடிக்காலடிகள் இறுதியாக அடிவைத்த இடம் அது.அந்த இடத்திற்கு வந்தர்க்கான வந்ததற்கான அடையாளங்களும் இருக்கின்றன.ஆனால் அங்கிருந்து இறங்கிப்போனதற்கு எந்த அடையாளமும் இல்லை.அதனால் அந்த இடம் என் மனக்கண்ணில் தெளிவாக தெரிகிறது.

இறந்து போனவங்களோட உடம்பக்கூட பாக்க பயப்படுற ஆளு நான்.அதுலையும் தற்கொலை செய்துகிட்டவிங்களை நான் பாக்கவே மாட்டேன் அவ்வளவு பயம்.அப்படி இருந்ததாலயோ என்னவோ இவரோட வேலை இவரோட மனத்துயரம் இதையெல்லாம் உணரமுடியுதோ என்னவோ.நேரடியாக தமிழில் வெளிவந்திருக்க வேண்டியநூல் ஒரு மலையாளியின் முயற்சியால் ஆங்கிலத்தில் வந்து முருகவேள் அவர்களின் உழைப்பால் உன்னதம் பதிப்பகத்தார் தமிழில் வழங்கிருகிறார்கள்.

வெளியீடு : உன்னதம்,ஈரோடு
விலை : 140
தொடர்புக்கு:கௌதமசித்தார்த்தன்-9940786278

Visit the Site