சசி வாரியார் எனும் மலையாள எழுத்தர் பிரிதா என்ற தோழியின் உதவியோடு தமிழரான ஜனார்த்தனன் பிள்ளை எனும் தூகிலிடுபவரின் சுயசரிதையை முதலில் அவரது வாய் வழியாகவும் பின் அவராலேயே எழுதப்பெற்றும் ஆங்கிலத்தில் வெளியான நூல் Hangman's Journal.இதை இரா.முருகவேள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.ஏற்கனவே இவரது பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்,எரியும் பனிக்காடு போன்ற இவரது இரு மொழிபெயர்ப்பு நாவல்கள் வாசித்துள்ளதால் இந்நாவலையும் வாசிக்கும் ஆவலை மேலும் தூண்டியது.




இறப்பு என்பது எப்படி இருக்கும்.இறப்பை பற்றி சில பல கதைகள் இருந்தாலும் அது எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.முப்பதாண்டுகாலம் தூக்கிலிடுபவராக திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும்,விடுதலைக்குக்கு பிந்தைய இந்தியாவிலும் ஆரட்சர்ராக பணியாற்றியவர்.மொத்தம் 117 பேரை துக்கிலேற்றியிருக்கிறார்.அவரது அனுபவத்தை சசி வாரியார் புத்தகமாக கொண்டுவந்திருக்கிறார்(ஏனோ தமிழில் அது பற்றி யாரும் சிந்திக்கவில்லை).

தூக்கு தண்டனை அனுபவிப்பவரை விட அதை நிறைவேற்றுபவரின் மனத்துயரத்தையும் அவர்கள் அனுபவித்த குற்றவுணர்ச்சியையும்,சமூகத்தில் மற்றும் சக பணியாளர்களுடன் அவர்கள் நடத்தப்பட்ட விதம் பற்றியும் ஜனார்த்தனம் பிள்ளை நம்மிடையே பகிர்கிறார்.அவர் தான் முடித்த வேலைகளெல்லாம் மன்னரின் பெயரால் நிறைவேற்றப்பட்டது மன்னரோ கடவுளின் பெயரால் ஆணையிடுகிறார்.எனவே கடவுளின் பெயராலையே தான் இவ்வேலையை செய்வதாக அவர் தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டிருந்திருக்கிறார்.

அவரது தந்தைக்கு பின் அவர் இந்த வேலையை ஏற்று செய்திருக்கிறார்.தனது குடும்பத்திருக்காக அவர் இந்த வேலைக்கு போயிருக்கிறார்.நாட்டில் பஞ்சம் பசி எது நேர்ந்த போதிலும் இவருக்குண்டான சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது.தூக்கிலிடப்படும் நபர் முடிந்தளவு நீண்ட நேரம் துள்ளாமலும் கழுத்தெலும்பு முறியாமலும் சிரமமின்றி அனுப்பிவைப்பதை தனது கடமையாக கொண்டிருந்திருக்கிறார்.பணி ஓய்வுக்கு பிந்தைய நாட்களில் குற்றவுனர்ச்சியால் பாதிக்கப்பட்ட சமயங்களில் அவரது மாஷ் (ஆசிரியர்) உடனான உரையாடல் அவருக்கு சிறிது மன நிம்மதியை கொடுத்திருக்கிறது.அது பற்றியும் அவர் நினைவு கூர்கிறார்.

அவரது குறிப்புகளில் சில

மரணதண்டனை அளிக்கப்பட்ட நபர் அதிகாலை அழைத்துவரப்படுகிறார்.முந்தைய இரவு அவர் விரும்பும் உணவு அவருக்கு அளிக்கப்படுகிறது கடைசி இரவு தான் விரும்பிய உணவை அவர் சாப்பிடலாம் சூப்ரன்ட்டேன்டின் உணவையே தண்டனை அளிக்கப்பட உள்ளவருக்கும் வழங்கும் மரபு உள்ளது.அப்போதைய சூப்பிரண்டெண்டின் நேர்மை மிகுந்த ராகவன் நாயர் ஒரு நாள் தூக்குக் கைதியிடம் 'இறுதி உணவாக என்ன சாப்பிடுகிறாய்' என்று கேட்டதிலிருந்து இந்த மரபு தோன்றியது கைதி "இரவு எஜமான் என்ன சாப்பிடுறீங்களோ அதையே நானும் சாப்பிட விரும்புகிறேன்.

கைதியின் விருப்பத்தை உணர்ந்து கொண்ட ராகவன் நாயர் வீடுக்கு சென்று மனைவியிடம் வழக்கத்தைவிட நன்றாக ஒரு விருந்தாளிக்கு சமைப்பது போல் சமைத்து அதில் ஒரு பகுதியை சிறைக்கு அனுப்பி வைக்கும்படி சொன்னார்.இந்த வழக்கம் பின்னாளில் ஒட்டிக்கொண்டது.பின்பு தனது சொந்த மேசையிலிருந்து ஒரு வேலை உணவு அளிப்பதற்கு சிறை அதிகாரிக்கு ஒரு சிறிய தொகை வெகுமதியாக அளிக்கும் அளவிற்க்கு சென்றது.

அடுத்த முறை தூக்குமேடை பகுதியில் நுழையும் போது முதலில் என் கண்களில் படுவது பழைய அழுக்கேறிய மரப்பலகைகளான பொறிக்கதவின் மையத்திலுள்ள இருண்ட இடமாகத்தானிருக்கும்.ஆயிரம் ஜோடிக்காலடிகள் இறுதியாக அடிவைத்த இடம் அது.அந்த இடத்திற்கு வந்தர்க்கான வந்ததற்கான அடையாளங்களும் இருக்கின்றன.ஆனால் அங்கிருந்து இறங்கிப்போனதற்கு எந்த அடையாளமும் இல்லை.அதனால் அந்த இடம் என் மனக்கண்ணில் தெளிவாக தெரிகிறது.

இறந்து போனவங்களோட உடம்பக்கூட பாக்க பயப்படுற ஆளு நான்.அதுலையும் தற்கொலை செய்துகிட்டவிங்களை நான் பாக்கவே மாட்டேன் அவ்வளவு பயம்.அப்படி இருந்ததாலயோ என்னவோ இவரோட வேலை இவரோட மனத்துயரம் இதையெல்லாம் உணரமுடியுதோ என்னவோ.நேரடியாக தமிழில் வெளிவந்திருக்க வேண்டியநூல் ஒரு மலையாளியின் முயற்சியால் ஆங்கிலத்தில் வந்து முருகவேள் அவர்களின் உழைப்பால் உன்னதம் பதிப்பகத்தார் தமிழில் வழங்கிருகிறார்கள்.

வெளியீடு : உன்னதம்,ஈரோடு
விலை : 140
தொடர்புக்கு:கௌதமசித்தார்த்தன்-9940786278

20 பின்னூட்டம்:

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

தூக்கு தண்டனை நிறைவேற்றுவது என்பது உண்மையிலேயே மிக கடினமான வேலை. மனதளவில் மிகவும் ஏற்படுத்தக் கூடியது. மேலும் இது போலவே, மருத்துவமனை சிறு ஊழியர், போலீஸ்காரர்கள், போஸ்ட்மேன்கள், துப்புரவு பணியாளர்கள், ரயில் கேங்க்மேன்கள் போன்றவர்கள் கடுமையான சூழ்நிலைகளிலும் சிறப்பாக பணிபுரிவதினாலேயே நம்மை போன்றவர்கள் இயல்பான வாழ்வை நிம்மதியாக அனுபவிக்க முடிகிறது. இந்த தொழிலாளிகள் போன்ற நாட்டின் உண்மையான எளிய ஊழியர்களை நாம் போற்றக் கூட வேண்டாம். உரிய மரியாதை தரக் கூட மறுத்து விடுகிறோம். செய்யும் தொழிலே தெய்வம். எந்தப் பணியும் சிறந்ததே. அந்த பணியை சிறப்பாக செய்து முடிப்பவர் எவரேயாயினும் அவர் போற்றப் பட வேண்டியவரே என்ற நிலை வரவேண்டும் என்பதே எனது ஆசை.

December 6, 2008 at 4:26 PM  
Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

தூக்கு தண்டனை நிறைவேற்றுவது என்பது உண்மையிலேயே மிக கடினமான வேலை. மனதளவில் மிகவும் ஏற்படுத்தக் கூடியது. மேலும் இது போலவே, மருத்துவமனை சிறு ஊழியர், போலீஸ்காரர்கள், போஸ்ட்மேன்கள், துப்புரவு பணியாளர்கள், ரயில் கேங்க்மேன்கள் போன்றவர்கள் கடுமையான சூழ்நிலைகளிலும் சிறப்பாக பணிபுரிவதினாலேயே நம்மை போன்றவர்கள் இயல்பான வாழ்வை நிம்மதியாக அனுபவிக்க முடிகிறது. இந்த தொழிலாளிகள் போன்ற நாட்டின் உண்மையான எளிய ஊழியர்களை நாம் போற்றக் கூட வேண்டாம். உரிய மரியாதை தரக் கூட மறுத்து விடுகிறோம். செய்யும் தொழிலே தெய்வம். எந்தப் பணியும் சிறந்ததே. அந்த பணியை சிறப்பாக செய்து முடிப்பவர் எவரேயாயினும் அவர் போற்றப் பட வேண்டியவரே என்ற நிலை வரவேண்டும் என்பதே எனது ஆசை.

December 6, 2008 at 4:26 PM  
Kumky said...

:-))..,,

December 6, 2008 at 4:32 PM  
வால்பையன் said...

இந்த புத்தகதை சில பக்கங்கள் படிக்கும் வரை சலிப்பு மட்டுமே மனதில் நின்றது.

சுயபுரானங்கள் என்றுமே சலிப்பு மட்டுமே தரும்.

மேலும் இன்னொரு விசயம் யாருக்கும் இறப்பை பற்றி படிக்கும் ஆசை இல்லை.

காரணம் எல்லொரும் வாழ விரும்புகிறார்கள் நான் உட்ப்பட

மன்னிக்கவும் உண்மையை கூறுவதற்க்கு, இந்த புத்தகம் பெரிய மொக்கை

December 6, 2008 at 8:28 PM  
தேவன் மாயம் said...

இலக்கியமும் சுயசரிதைகளும் படிப்பதற்கு சிரமமாகத்தான் இருக்கும்.காந்தி விரும்பிபடித்த லியோ டால்ஸ்டாய் படிக்க சிரமம்தான்.மனசைத் தொட்டு உண்மையாக உண்ர தமிழர்கள் நிறைய பேர் தயராக இல்லை.இன்றைய தமிழ் நிலமை தொடர்ந்தால்
மெல்லத்தமிழ் இனிச்சாகும். தமிழ் ப்ளாக்கள் ஏமாற்றத்தயே அளிக்கின்றன.
தேவா.

December 7, 2008 at 7:41 AM  
JK said...

நல்ல தொகுப்பு !!!

December 10, 2008 at 6:07 AM  
☼ வெயிலான் said...

// இந்த புத்தகம் பெரிய மொக்கை //

கார்த்தி,

இதுக்குத்தான் புத்தகத்தை வாலுக்கெல்லாம் இரவல் கொடுக்கக் கூடாதுங்கிறது. :)

தல, நான் ஈரோடு வரும் போது உங்ககிட்ட வாங்கிக்கறேன். எடுத்து வையுங்க ;)

December 13, 2008 at 10:33 AM  
Prawintulsi said...

ந‌ல்ல‌ ப‌திவு...

ந‌ல்ல‌ புத்த‌க‌மாக‌ இருக்க‌ வேண்டும்...

இதை மொழிப் பெய‌ர்த்த‌து ந‌ல்ல‌ முய‌ற்சி. ப‌டிக்க‌ ஆவ‌லாக‌ உள்ளேன்.

முடிந்தால் அடூர் கோபால‌கிருஷ்ண‌னின் நிழ‌ல்குத்து பார்க்க‌வும். ஆங்கில‌த்தில் Shadow Kill என்று கிடைக்க‌லாம்...

December 31, 2008 at 10:00 PM  
தேவன் மாயம் said...

என் அறிவியல் பதிவு
பற்றி
அறிவுரை
வழங்க வருக..

January 23, 2009 at 7:58 AM  
butterfly Surya said...

அறிமுகத்திற்கு நன்றி.

"தூக்கு மேடை குறிப்புகள்" என்ற புத்தகமும் வாசித்து இருக்கிறேன்.

பாலன் எழுதியது என்று நினைவு.

அதையும் படித்து பாருங்கள்.

நன்றி. வாழ்த்துக்கள்.

January 30, 2009 at 11:13 PM  
KARTHIK said...

நன்றி பிரபுண்ணா,கும்க்கி,வால்,மருத்துவர் ஐயா,ஜெகே,வெயிலான்,பிரவீன்,சூர்யா.

// Maximum India

இது போலவே, மருத்துவமனை சிறு ஊழியர், போலீஸ்காரர்கள், போஸ்ட்மேன்கள், துப்புரவு பணியாளர்கள், ரயில் கேங்க்மேன்கள் போன்றவர்கள் கடுமையான சூழ்நிலைகளிலும் சிறப்பாக பணிபுரிவதினாலேயே நம்மை போன்றவர்கள் இயல்பான வாழ்வை நிம்மதியாக அனுபவிக்க முடிகிறது.//

முற்றிலும் உண்மைணா,

// வால்பையன்

சுயபுரானங்கள் என்றுமே சலிப்பு மட்டுமே தரும்.//

பாஸ் இது அந்த கதாசிரியர் எடிட் செய்யாத புத்தகம்.அதனால் கொஞ்சம் சுவாரசியம் கம்மியா இருக்கலாம்.
ஒரு எழுத்தார் அல்லாத ஒருத்தர் இந்தளவுக்கு எழுதுரது பெரிய விசையம் தான்.ழுழுக்க பாடிங்க.

// thevanmayam

காந்தி விரும்பிபடித்த லியோ டால்ஸ்டாய் படிக்க சிரமம்தான்.//

டாட்டர் நான் அவரொட குற்றமும் தண்டனையும் ரொம்ப விரும்பித்தான் படிச்சேன்.அது ஒரு அற்புதமான் படைப்பு.

//@ வெயிலான்

தூக்கிலடப்பட்ட தமிழை காப்பற்றியதுக்கு மிக்க நன்றிங்க வெயிலான்.

// Praveen

முடிந்தால் அடூர் கோபால‌கிருஷ்ண‌னின் நிழ‌ல்குத்து பார்க்க‌வும்.//

இது வரைக்கும் அடூர்யை வாசித்ததில்லை பிரவீன்.நிச்சையம் வாங்படிக்கிறேன்.

//வண்ணத்துபூச்சியார்

"தூக்கு மேடை குறிப்புகள்" என்ற புத்தகமும் வாசித்து இருக்கிறேன்.//

அதையும் ஒரு பதிவா போடுங்க சூர்யா.

February 16, 2009 at 11:44 AM  
Unknown said...

நூல் அறிமுகம் அருமை கார்த்திக். தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் வலைத்தளத்திற்கு முதன்முறையாக வந்துள்ளேன். அய்யனாரின் பின்னூட்டம் ஒன்றின் மூலம். video clippings மிகவும் பிடித்தது. இனி தொடர்ந்து வாசிக்கிறேன். வாழ்த்துக்கள்!

March 8, 2009 at 3:59 PM  
Tech Shankar said...

அடடா . நிறைய வீட்டுப்பாடம் செஞ்சுருப்பீங்க போல

March 31, 2009 at 11:41 PM  
KARTHIK said...

நன்றி விஜி,

நன்றி உமா

நன்றி தமிழ்ணா

April 23, 2009 at 10:22 PM  
Nathanjagk said...

மிக நல்ல அறிமுகம்! //அந்த இடத்திற்கு வந்தர்க்கான வந்ததற்கான அடையாளங்களும் இருக்கின்றன.ஆனால் அங்கிருந்து இறங்கிப்போனதற்கு எந்த அடையாளமும் இல்லை// என்ற வரிகள் நூலின் வீரியத்​தை உணர்த்துகின்றன! சசி வாரியாருக்கு என் பாராட்டுகள்! இ​தை அ​டையாளப்படுத்திய உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்!

September 4, 2009 at 6:52 PM  
V.N.Thangamani said...
This comment has been removed by the author.
December 19, 2009 at 11:06 AM  
V.N.Thangamani said...

நல்ல பதிவு
நாளை சந்திப்போம்
நன்றி, வாழ்க வளமுடன்.

December 19, 2009 at 11:07 AM  
selventhiran said...

அருமையான அறிமுகம் கார்த்திக்!

February 22, 2010 at 11:03 PM  
mrknaughty said...
This comment has been removed by a blog administrator.
October 5, 2010 at 10:23 PM  
Bendz said...

Hi,
Hard work with mental torture for the person. But it's unavoidable in society.

June 22, 2012 at 12:36 AM  
Visit the Site