நான் 96 ஆம் ஆண்டு எனது 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது அரையாண்டுத் தேர்விற்கு பிறகு.எனது அக்கா ஊர் பொங்கலுக்கு சென்ற நான். ஒரு சுப முகுர்த்த வேளையில்.வாழ்க்கையில் முதன்முறையாக அந்த ஊர் நண்ப சிகாமனிகளுடன்.தலைக்கு ஒரு black night பீரும்.இரண்டு wills புகைப்பானும் வாங்கிக்கொண்டு போயி வைக்போருக்கடியில் மறைத்து வைத்துவிட்டு இரவில் பார்த்துக்கொள்ளலாம் என்றிருந்து விட்டேன்.அன்றிறவு அவ்வூரில் நாடகம் போட்டார்கள்.அதனால் எல்லோரும் அங்கு சென்றுவிட்டனர்.நாங்கள் மூவர் மட்டும் பீரை ஆறாம்பித்து விட்டு சிகரெட்டை பட்ரவைத்தோம்.ஒரே இருமல் புகை தலைக்கு ஏறியது.இரண்டு பப் அப்புறம் எல்லாம் சரியாகி விட்டது.பீரடித்தத்தில் மூவருக்கும் மப்பு ஜாஸ்தி ஆனமரி நினைப்பு.அப்படியே சென்று அவரவர் வீட்டிற்க்கு சென்று விட்டோம்.அடுத்தநாள் காலையில் நானும் ஈரோடு வந்துவிட்டேன்.இரண்டு நாட்களுக்கு பிறகு அக்காவும் மச்சானும் நடந்தவற்றை என்னிடம் கேட்டார்கள் முதலில் மறுத்தாலும் பிறகு ஒத்துக்கொண்டேன்.அக்கா தான் கவலைப்பட்டால் என் அப்பாவிற்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை.அவருக்கு தெரிய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்.அவர்கள் இருவரும் மாட்டிக்கொண்டதும் மரண அடிவிளுந்ததையும் அக்கா சொன்னால்.இனியும் இது தொடரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டால்.
சில நாட்களுக்கு பின் புது நண்பர்கள் புதுப்புது உறவுகள்.எங்கும் புகை மயம்.ஒரு நாளைக்கு நான்கு சிகரட்களாக கடந்த 10 தாண்டுகளுக்கும் மேலாக எனது ஆறாவது விரல் போல உள்ளதை.கடந்த சில வாரங்களாக விடத்துடிக்கிறது.மனம் ஆனால் முடியவில்லை.ஒருமுறை சன் தொலைக்காட்சியில் காலை மலரில் ஒருநாள்.Dr.குருமூர்த்தி அவர்கள் பேசியதைக்கேட்டுவிட்டு ஒரு ஆறுமாத காலம் விட்டிருந்தேன்.மீண்டும் ஆரம்பம்.சிறு வித்தியாசம் அப்போது wills இப்போது kings அவ்வளவே.சுஜாதா கற்றதும் பெற்றதுமில் சில tips கொடுத்தார்.அதையும் பின்பற்றினேன்.சில நாட்களே மேலும் பல புதிய பழக்கங்கள் வந்து விட்டன.அதையெல்லாம் விடுவதற்குள் போது போதுமென்றாகிவிட்டது.
சில வாரங்களாக
CVR
பக்கங்களை நான் படிப்பதில்லை.கேன்சர் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறார்.ஒருவேளை (04th Feb புகையிலை ஒழிப்பு தினமால் கூட இருக்கலாம்) .அதனால் சிகரட் விட சொல்லி வலியுர்த்துவார்னு நானாக கற்பனை செய்துகொண்டு அந்தப்பக்கம் போவதில்லை.சென்றவார ஆவியில் புகையோடு விளையாடி,எமனோடு உறவாடின்னு ஒரு கட்டுரை
படிப்பதற்கு ஒன்றும் இல்லாததால் சர்புதீன் அவர்களின் கட்டுரையை படிக்க நேர்ந்தது.சர்புதீன் மேற்கொண்ட தம் பழக்கத்தால் அவருக்கு குரல் வலையில் கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த கேன்சர் செல்லை அகற்றும் போது அவர் பேசும் திறனை இழந்து விட்டார்.இப்போது ஒரு கருவியின் உதவியுடன் பேசுகிறார்.இதனால் அவர் படும் துன்பங்களை கூறினார்.சில உரையாடலுக்கு பிறகு இவ்வாறான புள்ளி விவரங்களை குடுத்திருக்கிறார்.
2005 முதல் 2015 வரை தம் அடிப்பதினால் இரப்போரின் எண்ணிக்கை 84 மில்லியன்கலக இருக்குமென்கிறார்.பெரியவர்கள் தம் அடிப்பதினால் 700 மில்லியன் குழந்தைகள் சுவாசக்கோலாரால் பாதிப்படைகிரார்கலாம்.மற்றவர்களின் ஆரோக்கியத்தை கெடுக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை.இவ்வாறாக சர்புதின் அவர்கள் தனது பேட்டியை நிறைவு செய்திருக்கிறார்.
இந்த கடைசி ஒருவரி மட்டும் ஒரு உறுத்தலை ஏற்படுத்துகிறது.ஒன்று தம்மை நிறுத்த வேண்டும்.இல்லை NoSomking படத்தில் K வுக்கு ஏற்ப்படும் நிலை ஏற்ப்படவேண்டும்.

அதனால் இன்றுமுதல் நான் ஒருமுடிவுக்கு வந்துள்ளேன்.இனிமேல் பொது இடங்களில் புகைப்பதில்லை.எதாவது காடு கரைகளில் மட்டும் தொடர்வதென்று முடிவு செய்துள்ளேன்.என்னால் பிறர் பாதிப்படயக்குகூடாது.நான்கை இரண்டாக்கி,இரண்டை ஒன்றாக்கி,கடைசியில் முழுவதுமாக நிருத்திவிடவேண்டும்.
9 பின்னூட்டம்:
என் நண்பன் ஒருவனும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவனாகத்தான் இருந்தான். அவன் சில நாட்களில் ஒறு முழூபாக்கட்டையும் காலி செய்யும் வழக்கம் கொண்டவனாகத்தான் இருந்தான். இப்போது முழுவதுமாக அவன் நிறுத்திவிட்டான் :) உண்மை தான் நிறுத்துவது என்பது அத்தனை சுலபமானது இல்லை! நான் நன்கு அறிவேன்.
அவன் பின்பற்றியது ஒறு சிறு கரியம்தான், ஒன்றை மறக்க இன்னொன்றை கடைபிடிப்பது! முதலில் அவன் எண்ணிக்கையை ஒவ்வொன்றாக குறைத்தான் அதற்கு பதில் டீ குடிப்பதை அதிக படுத்தினான்! இது ஒன்றும் அத்துனை சுலபத்தில் நிகழவில்லை! சிறிது காலம் பிடித்தது.
ஒவ்வொன்றாக குறைத்து பின் இப்போது அவனது தம் அடிக்கும் வழக்கம் முழுவதுமாய் நின்றுவிட்டது :) இப்போது எல்லம் டீ அதிகமாக குடிக்கிறான் :) அவன் தம் அடிக்கும் பழக்கம் நின்றதே அது போதும்! இன்னுமொன்று அவன் பின்பற்றியது, நாம் உணர்வுகளுக்கு கட்டுபட்டவர்கள் ஆதனால் நண்பர்களோடு இறுக்கும் போது அவர்கள் தம் அடிப்பதை பார்த்தால் அடிக்க வேண்டும் என்ற ஆவல் எழும் அதுதானே இயற்கை :) அதனால் அந்த மாதிரியான சந்தர்ப்பங்களுக்கு அவன் இடம் தந்ததே இல்லை! அதாவது அவன் அதுபோன்ற சூழலில் இருப்பதில்லை.
இப்போது அவன் எண்ணமெல்லாம் டீ குடிப்பதை எப்படி குறைப்பது என்பதுதான் :))
என்ன கார்த்திக் பெரிய lecture அடிசிட்டேனா :))
Just wanted to show you that it is not Impossible!
உங்களோட பழக்கம் நிற்க என் வாழ்த்துக்கள்!
வாங்க சதீஷ்
//அவன் பின்பற்றியது ஒறு சிறு கரியம்தான், ஒன்றை மறக்க இன்னொன்றை கடைபிடிப்பது! முதலில் அவன் எண்ணிக்கையை ஒவ்வொன்றாக குறைத்தான் அதற்கு பதில் டீ குடிப்பதை அதிக படுத்தினான்! இது ஒன்றும் அத்துனை சுலபத்தில் நிகழவில்லை! சிறிது காலம் பிடித்தது.//
நானும் உங்கள் நண்பர் போலத்தான்.ஆனால் நான் இப்போது டீ யையும் சேர்த்து நிறுத்த முயற்சிக்குறேன்.
//இப்போது அவன் எண்ணமெல்லாம் டீ குடிப்பதை எப்படி குறைப்பது என்பதுதான் :)) //
எப்படியோ ஏதாவதொரு பழக்கம் தொற்றிக்கொள்வது தவிர்க்கமுடியததகிறது.
உங்கள் நண்பர் தம்மை நிறுத்தியது சந்தோசமே.
அப்படியெல்லாம் இல்லை சதீஷ்
வாழ்த்துக்கு நன்றி
அருமையான பதிவு.
சிகரெட்டை நிறுத்துவது மிகவும் எளிது.
நான் பலமுறை நிறுத்தி இருக்கிறேன்.:))
வால்பையன்
சீக்கிரம் முழுமையாக இப்பழக்கத்தை விட்டுவிட வாழ்த்துகிறேன் கார்த்திக்.
காசைக் கரியாக்கி,நோயை வாங்குகிறோம் நண்பரே.
வாங்க ஷெரீப்
விரைவில் விட்டுவிடுகிறேன்
நன்றி
try to stop this
Post a Comment