பிடித்த பாடல்

படம் : அழகிய தீயே
பாடியவர் : ரமேஷ் விநாயகம்.
இசை : ரமேஷ் விநாயகம்

நேற்று றேடியோஸ்பதி இணையத்தில் பார்க்கும்போது
இந்த வார சிறப்பு நேயராக நண்பர் எம்.ரிஷான் ஷெரிப் அவர்களின் பாடல்கள் இடம் பெற்றிருந்தன.5 பாடல்கள் அனைத்தும் மிக அருமையான தேர்வுகள்.

அதில் அழகிய தீயே படத்தில் இடம் பெற்ற விழிகளின் அருகினில் வானம் பாடல் இடம்பற்றிருந்தது.என்னை மிகவும் கவர்ந்த பாடல்.இந்த படமும் இந்த பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இதில் வரும் வரிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிகழ்வை நினைவு படுத்துவதாக இருக்கும்.அதிலும் எனது நண்பன் பூபதிக்கு இந்தப்பாடல் என்றால் ஊயிர்.

//இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்! //

பெரும்பாலும் பெண்களைப்பார்க்கும் போது இந்த வரிகள் முணுமுனுப்பான்.

இதில் வரும் அனைத்துவரிகளும் என்னை மிகவும் கவர்ந்தவை.இரவில் பெரும்பாலும் இப்பாடலே ஓடிக்கொண்டிருக்கும்.இவ்வாரம் பெரும்பாலோனோர்க்கு இப்பாடலே பிடித்திருந்தது.

விழிகளின் அருகினில் வானம்...

படம் : அழகிய தீயே
பாடியவர் : ரமேஷ் விநாயகம்.
இசை : ரமேஷ் விநாயகம்

விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

பூ போன்ற கன்னி தேன்,
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்!
அது ஏன் என்று யோசித்தேன்!
அட நான் எங்கு சுவாசித்தேன்?
காதோடு மெளனங்கள்,
இசை வார்க்கின்ற நேரங்கள்,
பசி நீர் தூக்கம் இல்லாமல்,
உயிர் வாழ்கின்ற மாயங்கள்!
அலைகடலாய் இருந்த மனம்,
துளி துளியாய் சிதறியதே!
ஐம்புலனும், என் மனமும்,
எனக்கெதிராய் செயல்படுதே!
விழி காண முடியாத மாற்றம்!
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்!
ஒரு மெளன புயல் வீசுதே!
அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யா!

பூவில் என்ன புத்தம் புது வாசம்!
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்!
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்!
யாரோ என்று எந்தன் மனம் தேடும்!

கேட்காத ஓசைகள்,
இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்!
சொல் என்னும் ஓர் நெஞ்சம்!
இனி நில் என ஓர் நெஞ்சம்!
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்,
ஒரு போர்க்காலம் ஆரம்பம்!
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!

விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

என்னை எப்பொழுதும் தன்னிலை மறக்கச் செய்யும் பாடல் என்றால் இதுதான்.
ரமேஷ்விநாயகத்தின் மென்மையான குரல் பாடலை மேலும் அழகூட்டுகிறது.இப்பாடலைப்பாட ஒரு பிரபல பாடகர் வராத காரணத்தால் இப்பாடலை இவர் பாடநேர்ந்த்தாகக் கேள்விப்படுகிறேன்.ஆனாலும் சிறப்பாகப் பாடியிருக்கிறார்.இவரது இசையும் மிக ரம்மியம்.
அடுத்து வரிகள்..
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!

இப்பாடலை அனுப்பிய ரிஷான் அவர்களுக்கும் அதை வழங்கிய தல கான பிரபா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

12 பின்னூட்டம்:

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் கார்த்திக்,

இந்தப் பதிவின் மூலமும்,பாடலின் மூலமும் என் மனதுக்கு நெருக்கமாகி விட்டீர்கள்.மிக மகிழ்வாக உணர்கிறேன்.
மிக நன்றிகள் நண்பா :)

March 18, 2008 at 11:00 AM  
கார்த்திக் said...

நன்றிகள் ரிஷான்

March 18, 2008 at 6:16 PM  
Divya said...

\\பெரும்பாலும் பெண்கலைப்பார்க்கும்போது இந்த வரிகள் முணுமுனுப்பான்.\\


'பெண்களைப்பார்க்கும்போது' - எழுத்துப்பிழை, சரிசெய்துக்கொள்ளுங்கள்,

அழகான ரசிப்பு கார்த்திக்!!

March 19, 2008 at 9:39 AM  
கார்த்திக் said...

//'பெண்களைப்பார்க்கும்போது' - எழுத்துப்பிழை, சரிசெய்துக்கொள்ளுங்கள்,//


மாற்றிவிட்டேன் திவ்யா
வருகைக்கு நன்றி.

March 19, 2008 at 6:50 PM  
tamizh said...

//என்னை எப்பொழுதும் தன்னிலை மறக்கச் செய்யும் பாடல் என்றால் இதுதான். '//

நல்ல ரசனை!

March 19, 2008 at 9:08 PM  
நிவிஷா..... said...

one of my fav songs:)

gud one karthik!


natpodu
Nivisha

March 20, 2008 at 5:01 AM  
கார்த்திக் said...

நன்றி தமிழ், நிவிஷா

March 20, 2008 at 5:31 PM  
sathish said...

நான் தொடர்ந்து இரசிக்கும் சில பாடல்களில் இதுவும் ஒன்று! வரிகளை தந்ததற்கு நன்றி கார்த்திக்

March 23, 2008 at 3:13 AM  
கார்த்திக் said...

அந்த பதிவில் பெரும்பாலோனர் ரசித்த பாடலும் இதுதான் சதீஷ்

March 24, 2008 at 4:58 PM  
ரகுநாதன் said...

அடடா கொஞ்சம் முந்திகிட்டீங்க கார்த்தி.. நான் கொஞ்ச நாளா இத யோசிச்சேன் என்னோட செல் பேசியில் கூட பதிவு பண்ணி இருக்கேன்... அனா நீங்க பதிவ போட்டு தாக்கீடீங்க..
பரவ இல்ல
எனக்கு புடிச்ச வரி என்னன்னா

அலைகடலாய் இருந்த மனம், துளி துளியாய் சிதறியதே!

அலை கடல் எனில் அந்த மனம் எப்படி எல்லாம் ஓயாமல் அடித்துக் கொண்டு இருந்திருக்கும் ..ஒரு பெண்ணை பார்த்தவுடன் அது ஒரு துளி போல சிதறியது என்றால் அவள் எப்படிப்பட்ட பெண்ணாக இருந்திருப்பாள்?

இருதயமே துடிக்கிறதா? துடிப்பது போல் நடிக்கிறதா?
அட அட அடா என்ன ஒரு வரி.. சிலிர்க்கிறது என உள்ளம்..
துடிப்பது அதன் இயல்பு.. ஆனால் அவளை பார்த்தவுடன் இதயமே நின்று ... பாத்து ...ரசித்து ...அப்புறம் துடிக்குது.. இந்த இடைப்பட்ட நேரத்துல நான் என்னை உணர முயற்சிக்கும் போது இதயம் லப் டப் போடுதா இல்லையான்னு ஒரு சந்தேகம் ... அதனால் தான்
இருதயமே துடிக்கிறதா? துடிப்பது போல் நடிக்கிறதா?

அதாவது அதுவும் அவளை ரசிகுது டோய் அப்டின்னு அர்த்தம்
இந்த பதிவுக்கு
நன்றி கார்த்திக்

March 25, 2008 at 12:53 PM  
கார்த்திக் said...

//அலை கடல் எனில் அந்த மனம் எப்படி எல்லாம் ஓயாமல் அடித்துக் கொண்டு இருந்திருக்கும் ..ஒரு பெண்ணை பார்த்தவுடன் அது ஒரு துளி போல சிதறியது என்றால் அவள் எப்படிப்பட்ட பெண்ணாக இருந்திருப்பாள்?//

//அட அட அடா என்ன ஒரு வரி.. சிலிர்க்கிறது என உள்ளம்..
துடிப்பது அதன் இயல்பு.. ஆனால் அவளை பார்த்தவுடன் இதயமே நின்று ... பாத்து ...ரசித்து ...அப்புறம் துடிக்குது.. இந்த இடைப்பட்ட நேரத்துல நான் என்னை உணர முயற்சிக்கும் போது இதயம் லப் டப் போடுதா இல்லையான்னு ஒரு சந்தேகம் ...//

அட அட பின்னிடிங்க போங்க.
என்னமா ரசிச்சு எழுதுறிங்க.
இப்படி எழுதிட்டு எழுத வரலென எப்படி தும்பி.

March 25, 2008 at 1:27 PM  
தமிழ்நெஞ்சம் said...

Great song from Great person.
Aha.. Asathureenga...

April 14, 2008 at 4:05 PM  
Visit the Site