Children of Haven (சில்ட்ரன் ஆஃப் ஹெவன்)


உலக சினிமா என்றொன்று இருப்பதே ஆவியில் செழியன் எழுதி வெளிவந்த உலக சினிமா படித்த பிறகே அப்படி ஒரு சினிமா உலகம் இருப்பதே எனக்குத்தெரியும் அந்த வரிசையில் நேற்று நான் பார்த்த படம் சில்ட்ரன் ஆஃப் ஹெவன்.அந்த தொடரில் நான் முதன் முதலில் வாசித்தது இந்தப்படம் தான்.அன்றிலிருந்து இப்படத்தை வாங்குவதருக்கு முயற்சி செய்தேன்.இப்போது தான் கிடைத்தது.

சிறிய குழந்தைகளுக்கான பழைய சூவை ஒரு முதியவர் தைத்தபடியே காட்சி ஆரம்பம் ஆகிறது.அந்த சூவை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு தேவையான காய்கறிகள் வாங்கிக்கிகொண்டு வீட்டுக்கு செல்கையில் சூ தொலைந்துவிடுகிறது.காய்கறிக்கடையில் பழைய குப்பை எடுப்பவர் தவறுதலாக சூவையும் எடுத்து சென்றுவிடுகிறார்.சிறுவன் அலி சூ இல்லாமல் வீடுவந்து சேர்கிறான்.வீட்டில் உடல் நலம் சரியில்லாத அவனது தாய் வாடகை மற்றும் மளிகை கடை சரியான தொழில் இல்லாத அவனது தந்தை. சூ வாங்க முடியாத மோசமான சூழ்நிலையில் அவனது குடும்பம்.

அலியின் தங்கை ஜாரா நாளை பள்ளிக்கு தான் சூவணிந்து செல்லவேண்டும் என்பாள்.அதனால் தனக்கு சூவைத்தரும் படி வேண்டுவாள் இல்லாவிட்டால் தந்தையிடம் சொல்லுவதாக சொல்லுவாள்.அலி தனது குடும்பச்சூழ்நிலையை விளக்கி தனது சூவை அணிந்துகொண்டு பள்ளிக்கு செல்லுமாறு கூறுவான்.அப்பாவிற்கு தெரியாமல் இருவரும் நோட்டில் எழுதி எழுதி பேசிக்கொள்வதாக காட்சியமைக்கப்பட்டிருக்கும்.

காலையில் ஜாரா அலியின் சூவை அணிந்த்துகொண்டு பள்ளிக்கு செல்வாள்.மதியம் ஓடோடிவந்து அண்ணனுக்கு தருவாள்.பாதிவழியில் நிற்க்கும் அலி சூவை பெற்றுக்குகொண்டு பள்ளிக்கு ஓடுவான்.
அதனால் அவன் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்ப்படும்.முதல்நாள் தாமதமாக வருவதை அவனது தலைமை ஆசிரியர் பார்ப்பார் விட்டுவிடுவார்.ஒருநாள் ஜாரா பள்ளி விட்டுத்திரும்பும் போது சூ தவறுதலாக சாக்கடையில் விழுந்துவிடும்.அதை எடுக்கமுடியாமல் தவிப்பாள்.அதை பார்க்கும் ஒரு பெரியவர் அவளுக்கு உதவுவார்.சூவை எடுத்துக்கொண்டு போய் அலியிடம் சேர்ப்பாள்.இதன் காரணமாக பள்ளிக்கு தாமதமாக செல்லும் அலி தலைமை ஆசிரியரிடம் மாட்டிக்கொள்வான்.சூ ஈரமாக இருப்பதற்கான காரணங்களை கேட்டுவிட்டு இனிமேல் தாமதமாக வரக்கூடாது என்று சொல்லி அனுப்புவார்.

பள்ளியில் அலி நன்றாக படித்ததற்காக அவனுக்கு அவன் வகுப்பாசிரியர் ஒரு பேனா பரிசளிப்பார்.அதை தனது தங்கை ஜாராவுக்கு அளிப்பான் அலி.ஜாராவின் சக பள்ளி மாணவி தன்னுடைய சூவை அணிந்த்திருப்பதை பார்க்கிறாள்.அந்த சூவை பார்த்துக்கொண்டே அவளை பின்பற்றி அவளது வீடுவரை சென்றுவிட்டு திரும்புவாள்.அதனால் அலி பள்ளி செல்வதில் தாமதம் ஏற்ப்படும்.மீண்டும் தலைமையாசிரியரிடம் மாட்டிக்கொள்வான்.இந்த முறை அவனை வெளியே அனுப்பிவிடுவார் அப்போது அங்கு வரும் அவனது வகுப்பாசிரியர் அவானுக்காக பரிந்து பேசி அழைத்துப்போவார்.

ஜாரா அண்ணன் அலியை அழைத்துக்கொண்டு தன்னுடன்பயிலும் மாணவியின் வீட்டுக்கு அலைத்துப்போவாள்.அவர்கள் ஒளிந்திருந்து அவள் வீடையே பார்த்துக்கொண்டிரிருப்பார்கள்.அப்போது பார்வையற்ற தன் தந்தையை அழைத்துக்கொண்டு வியாபரத்திருக்கு வெளியே கிளம்புவாள்.அந்தக் காட்சியை பார்த்த இருவரும் ஒன்றும் பேசாமல் வீடு திரும்புவர்.

ஒருநாள் வெள்ளிக்கிழமை ஏதாவது தோட்ட வேலை கிடைக்கிறதா என்று பணக்கார்கள் வசிக்கும் பகுதிக்குள் அலியும் அவன் தந்தையும் வேலை தேடுகிறார்கள்.ஒரு வேலையும் கிடைக்காத சமயத்தில் அலியின் சாமர்த்தியத்தால் ஒரு வீட்டில் வேலை கிடைக்கிறது.அவர் எதிர்பாராத அளவு பணமும் கிடைக்கிறது.வீட்டிற்க்கு போகும் வழியில் தந்தை சைக்கிளை மித்த்தபடி பல கனவுகளுடன் செல்கிறார்.வீட்டுக்கு தேவையான பொருட்களை பட்டியலிடுகிறார்.சைக்கிளின் முன் தண்டில் அமர்ந்திருக்கும் அலி அதைக்கேட்டுக்கொண்டே அப்படியே தங்கை ஜாராவுக்கும் ஒரு சூ வாங்க வேண்டும் என்கிறான்.சரி என்றபடியே ஒரு இறக்கத்தில் சைக்கிளில் வேகமாக செல்கிறார்.அப்போது எதிர்பாராத விதமாக பிரேக் பிடிக்காமல் நிலைதடுமாறி இருவரும் கீழே விழ இருவரும் சோகமாக வீடு திரும்புகிறார்கள்.

அண்ணன் அலி பரிசாக அளித்த அந்த தங்க நிரப்பேனவை கீழே தவற விடுவாள் ஜாரா
அதை அந்த ஜாராவின் சூவை அணித்துள்ள பெண் எடுத்துக்கொடுப்பால்.அதிலிருந்து இருவரும் நட்ப்பாகிவிடுவர்.ஒருநாள் புது சூவுடன் வரும் அவளைப்பார்த்து எங்க அந்த பழைய சூ என்று அவள் புது சூவை பார்த்தபடி கேட்பாள்.அவளும் பழையது தன்னிடம் இல்லையென்றும் தனது தந்தை புதிதாக வாங்கித்தந்ததைப்பற்றி கூறும்போதே ஜாரா கோவமுடன் அங்கிருந்து விலகுவதை காரணம் புரியாமல் மலங்கமலங்க விழித்தபடி பார்த்து நிற்ப்பாள் அந்தச்சிறுமி.

பள்ளிகளில் அளவில் நடக்கும் ஒரு மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்வதாகவும் அதில் தான் மூன்றாம் இடம் பெறுவதாகவும் தன் தங்கையிடம் கூறுவான் அலி.ஏன் மூன்றாம் இடம் என்றதற்கு அந்த இடத்திருக்குத்தான் ஒரு ஜோடி சூக்கள் பரிசு என்பதால் தான் மூன்றாம் இடம் வரப்போவதாக உறுதியளிக்கிறான்.அடுத்தநாள் ஓட்டப்பந்தையத்தில் அலிஒடத்துவங்குகிறான்.அப்போது ஜாரா தன் அண்ணனுக்காக சூவுடன் ஜாரா ஓடிவருவது போல பின்னணியில் இசை ஒலிக்கப்படுகிறது.அலிக்கும் ஜாராவுக்கும் நடக்கும் உரையாடல்கள் அவன் நினைவில் வந்துதுவந்து போகிறது.வெற்றிக்கோட்டை நோக்கி சக மாணவர்களுடன் போட்டிபோட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறான்.

முடிவில் அலி போட்டியில் தான் நினைத்த மூன்றாவது இடத்தை அடைந்தான இல்லையா என்பதை வெகு அற்ப்புதமாக காட்சியாக்கப்பட்டிருக்கும்.அலி மற்றும் ஜாராவாக நடித்த சிறுவர்கள் இருவரும் அக்கதா பாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டினார்கள் என்றே கூறவேண்டும்.இரான் என்றால் செல்வச்செழிப்பான நாடு அங்கு ஏழைகளே இருக்க வாய்ப்பில்லை என்றெண்ணிய என்போன்றவர்களின் எண்ணத்தை தகர்த்தெறியும் படம்.அந்நாட்டில் வாழும் விளிம்பு நிலை மனிதர்களின் நிலையை காட்சிகளினூடே மெல்லிய இசையுடன் தெளிவாக சொல்லிஇருப்பார் படத்தின் இயக்குனர் மஜித் மஜிதி.

இப்படத்தை பெற விரும்புவோர் 9841898145 கௌத் என்பவரை தொடர்புகொள்ளவும்.பீச் ஸ்டேஷன் அருகில் இவரது கடையுள்ளது.இவரிடம் அனைத்து உலக சினிமாவும் கிடைக்கிறது.ஈரோட்டில் இருப்பவர்கள் நந்து அண்ணாவை தொடர்புகொள்ளவும்.அவரது நண்பர் மாதம் ஒருமுறை ஒரு படம் திரையிடுகிறார்.அதற்காக வருட சந்தாவகா ஒரு சிறிய கட்டணம் நிர்னைத்திருக்கிறார்.விருப்பமுள்ளவர்கள் அதில் உறுப்பினர் ஆகலாம்.

நான் ரசிக்கும் சில சினிமா பற்றிய பதிவுகள்; அய்யனார்,மோகன்தாஸ்,பிரவீன், மதி ,லேகா........

14 பின்னூட்டம்:

அய்யனார் said...

நல்ல துவக்கம் கார்த்திக்..தொடர்ந்து எழுதுங்கள்..

வாழ்த்துக்கள்

July 29, 2008 at 9:43 PM  
தமிழ்நெஞ்சம் said...


I like your posts.. great

July 30, 2008 at 2:35 PM  
எம்.ரிஷான் ஷெரீப் said...

மிக நீண்டநாளாக நான் பார்க்கவிரும்பும் படமிது கார்த்திக். அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

ஒவ்வொரு நல்லபடமாகத் தொடர்ந்து எழுதுங்கள் நண்பா.பார்க்க ஆவலாக இருக்கிறேன் :)

July 30, 2008 at 9:23 PM  
கார்த்திக் said...

//அய்யனார் said...
நல்ல துவக்கம் கார்த்திக்..தொடர்ந்து எழுதுங்கள்..
வாழ்த்துக்கள் //

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிங்க அய்யனார்.

நன்றி தமிழ்ணா.

//ஒவ்வொரு நல்லபடமாகத் தொடர்ந்து எழுதுங்கள் நண்பா.பார்க்க ஆவலாக இருக்கிறேன் :)//

தங்கள் கருத்துக்கு நன்றி ரிஷான்.

July 31, 2008 at 2:30 PM  
லேகா said...

நல்ல பதிவு கார்த்திக்.உலக சினிமா சிடிக்கள் கிடைக்கும் இடத்தை குறிப்பிட்டுள்ளதற்கு நன்றி!!

August 4, 2008 at 9:06 PM  
sathish said...

இது போன்று உலக சினிமாக்கள் பற்றி வாசித்து நாட்கள் ஆகிறது! இரசித்து எழுதுங்கள் :)

August 5, 2008 at 6:02 AM  
கார்த்திக் said...

நன்றி லேகா.

நன்றி கவிஞ்ர்சதீஷ்.

August 5, 2008 at 5:35 PM  
ரௌத்ரன் said...

நல்ல பதிவு..இத்தோடு "Way Home".,பாருங்கள்...ஏற்கெனவே பார்த்திருந்தால் பதிவிடுங்கள்...நந்துவை அறிமுகம் இல்லை..எனினும் நந்துவின் நண்பர்கள் எனக்கும் நண்பர்கள்,நந்து.ஈரோடு...இரண்டு வார்த்தைகள் ஏதோ ஒரு புள்ளியில் ஏதோ ஒரு சித்து விளையாட்டு செய்கிறது..ம்ம்ம்

August 11, 2008 at 8:37 PM  
Aneslin said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
ஒவ்வொரு நல்லபடமாகத் தொடர்ந்து எழுதுங்கள் நண்பா.பார்க்க ஆவலாக இருக்கிறேன் :)
//

நானும்தான் நண்பரே.
வாழ்த்துக்கள்.
இன்னும் எதிர்பார்க்கும்
சுபாஷ்

August 12, 2008 at 12:51 AM  
மஞ்சூர் ராசா said...

மிகவும் சிறப்பாக எழுதுகிறீர்கள். நல்ல ரசனை. தொடர்ந்து எழுதவும்.

சித்தார்த், பாம்பாட்டி சித்தன், தம்பி போன்றவர்களின் பதிவுகளையும் பார்க்கவும்.

August 12, 2008 at 7:45 PM  
கார்த்திக் said...

// ரௌத்ரன் said...
நல்ல பதிவு..இத்தோடு "Way Home".,பாருங்கள்...ஏற்கெனவே பார்த்திருந்தால் பதிவிடுங்கள்... //

நானும் இந்தப்படத்தைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.
இந்த முறை வாங்கிப்பார்க்கிறேன்.

// நந்துவை அறிமுகம் இல்லை..எனினும் நந்துவின் நண்பர்கள் எனக்கும் நண்பர்கள்,நந்து.ஈரோடு...இரண்டு வார்த்தைகள் ஏதோ ஒரு புள்ளியில் ஏதோ ஒரு சித்து விளையாட்டு செய்கிறது..ம்ம்ம் //

நம்ம ஊருக்கு வாங்க தெரிஞ்சுக்கலாம்
நன்றி ரௌத்ரன்.

நன்றி சுபாஷ்.

// மஞ்சூர் ராசா said...
சித்தார்த், பாம்பாட்டி சித்தன், தம்பி போன்றவர்களின் பதிவுகளையும் பார்க்கவும்.//

சித்தார்த் மற்றும் தம்பி கதிர் அவர்களின் பதிவுகளையும் படித்து வருகிறேன்.
பாம்பாட்டி சித்தன் அவர்கள் பதிவை வாசித்ததில்லை.இனி அவரது பதிவையும் வாசிக்கிறேன்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

August 13, 2008 at 3:43 PM  
ரவிசங்கர் said...

இத்திரைப்படத்தை இங்கு பெறலாம்.

September 2, 2008 at 4:49 PM  
கார்த்திக் said...

நன்றி ரவிசங்கர்.

September 2, 2008 at 4:56 PM  
மோகன் குமார் said...

We could not talk much during Erode Sangamam.

**
I have also written about this film recently only:

http://veeduthirumbal.blogspot.com/2011/12/children-of-heaven.html

December 22, 2011 at 7:38 PM  
Visit the Site