தமிழுக்கு அமுதென்று பேர்
எனக்கு மிகவும் பிடத்த பாடல்களில் இதுவும் ஒன்று.எனது சிறுவயதில்
சென்னை தொலைக்காட்சில் வந்த ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் இந்தப்பாடல்ஒளிபரப்பாக கேட்பேன்.பாவேந்தரின் இவ்வரிகள் எனது பாடத்தில் வந்ததால்இப்பாடல் வரிகள் எனது மனதில் எளிதாக பதிந்தது.தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!


-பாவேந்தர் பாரதிதாசன்

நன்றி தமிழ்நெஞ்சம்

8 பின்னூட்டம்:

தமிழ்நெஞ்சம் said...

Thanks dear dude Karthik,

Is Vizhiyan your friend.
He is also friend of mine.

I saw him once with Saaralil' Jeyakumar.

I was staying in Madiwala. Vizhiyan's marriage is coming soon.

Enjoy.

April 30, 2008 at 12:02 PM  
கார்த்திக் said...

//I saw him once with Saaralil' Jeyakumar.//

வாங்க தல
நானும் இன்னம் அவர பாத்ததில்லிங்க.
அவர் கல்யாணத்துக்கு வாங்க அங்க பாத்துக்குலாம்.

May 1, 2008 at 1:28 PM  
தேன்மொழி said...

nandri karthik ,
romba naal ku apram intha patta ketkavachiteenga ..
:-)

May 3, 2008 at 5:38 AM  
கார்த்திக் said...

//romba naal ku apram intha patta ketkavachiteenga //

என்ன பண்ணுறது இந்த ஒரு நாலாவது இவங்கள நினைப்போம் தேன்.

May 3, 2008 at 12:54 PM  
rahini said...

nalla pathivu

rahini

May 5, 2008 at 1:40 AM  
கார்த்திக் said...

நன்றி கவிக்குயில்

May 5, 2008 at 11:35 AM  
Illatharasi said...

எனக்கும் மிகவும் பிடித்த பாடல். இன்று mp3 டவுன்லோட் செய்து கேட்டு கொண்டிருந்தேன்.......

தற்செயலாக உங்கள் பதிவை கண்டேன்......பாடல் வரிகள் copy எடுத்து கொண்டேன்;)

May 23, 2008 at 7:40 PM  
கார்த்திக் said...

வாங்க இலத்தரசி நானும் தமிழ் அண்ணா பதிவுல இருந்து காப்பி தாங்க

PIT
முதல் பத்துல வந்துட்டிங்க,அப்படியே முதல் மூனுல வர வாழ்த்துக்கள்.

May 23, 2008 at 8:17 PM  
Visit the Site